31.1 C
Chennai
Monday, May 20, 2024
e0481b308dd846138de3988212760386
சரும பராமரிப்பு

சரும நோய்களை தீர்க்கும் கேரட்

பொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலும் அழகுடன் மின்னும். அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந்தது. கேரட் சாப்பிட்டால் கண்களுக்கும், சருமத்திற்கும் மிக நல்லது. கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைசாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும்.

மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்தசெல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சருமநோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாகவைக்கும். கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ கண்பார்வைக்கு நல்லது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக் கூட தள்ளிபோட வாய்ப்பு உள்ளது. கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது.

கேரட் செடியின் வேர்ப்பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது. இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லை இருக்காது. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்றுநோய் முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்பநிலையிலேயே அழித்துவிடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

e0481b308dd846138de3988212760386

Related posts

அழகு வேண்டுமா? ஆரோக்கியம்…

nathan

சரும பாதுகாப்பு டிப்ஸ்

nathan

உடனடியாக சரும பிரச்சனை தீரனுமா? இன்ஸ்டன்ட் பலனை தரும் இந்த குறிப்புகள் ட்ரை பண்ணுங்க.

nathan

சருமம் பளபளக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்!!சூப்பர் டிப்ஸ்

nathan

மார்பகங்களில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க உதவும் சில இயற்கை வழிகள்!

nathan

வீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்லின் இருந்தா போதும்… ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்…

nathan

அரோமா தெரபி

nathan

கருப்பாக காணப்படும் கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ்…

nathan