29.6 C
Chennai
Wednesday, Jul 3, 2024
211
ஆரோக்கிய உணவு

மணத்தக்காளிக்காய்

மணத்தக்காளிக் கீரை வாங்கும் போது, அதில் கொத்துக் கொத்தாக பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் அதன் காய்களும் பழங்களும் இருப்பதைக் கவனித்திருக்கலாம். கீரையை மட்டும் கிள்ளி எடுத்துவிட்டு, அந்தக் காய்களையும் பழங்களையும் அப்புறப்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க கையில் கிடைத்த அரிய வாய்ப்பை நீங்கள் தூக்கி எறிகிறீர்கள் என்றே அர்த்தம். ஆமாம்… மணத்தக்காளிக் கீரையின் மகத்துவம் தெரிந்த உங்களுக்கு அதன் காய் மற்றும் பழங்களின் அருமையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். கீரைக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல அதன் காய். அது பழுத்து கருப்பாகும். அந்தப் பழங்களை அப்படியே வெறும் வாயில் மென்று தின்னலாம். சுவையாகவும் இருக்கும். மணத்தக்காளிக் காயின் மருத்துவ மகிமைகளைப் பட்டியலிடுவதோடு, அந்தக் காயை ைவத்து சூப்பரான மூன்று ஆரோக்கிய உணவுகளையும் செய்து காட்டுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்.

“மணத்தக்காளிக் கீரை வருடம் தோறும் கிடைப்பது போலவே அதன் காயும் கிடைக்கும். சில நேரங்களில் அந்தக் காயை மட்டும் தனியே விற்பார்கள். பச்சை மணத்தக்காளிக் காயை பல வகைகளில் சமையலில் சேர்க்கலாம். சுவையும் பிரமாதமாக இருக்கும்.
* இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.
* உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.
* வாய்ப்புண் இருக்கும்போது 4 இலைகளை அதன் காய்களுடன் மென்று அல்லது சாறு எடுத்து உட்கொண்டால் புண் ஆறிவிடும்.
* மணத்தக்காளி இலையையும் காய்களையும் விழுதாக அரைத்து தீப்புண் பட்ட இடத்தில் போட்டால் காயம் மறையும்.
* மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது.
* நுரையீரல் நோய்களை போக்குவதில் பூவும் காயும் பயன்படுகிறது.
* கண் மற்றும் தசைப் பகுதிக்கு நல்ல சக்தி தரும். தலைவலி, குடல்புண் மற்றும் சரும நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சிறுநீரகக் கோளாறுக்கும் சிறந்த மருந்து. மலச்சிக்கல் மற்றும் மன உளைச்சலுக்கு சிறந்தது.
* வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் இந்த இலையும் காயும் குணப்படுத்தும்.
* சீதபேதி மற்றும் அஜீரணக் கோளாறுக்கு பயனுள்ளது.
* மணத்தக்காளிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்.
* மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. கருவைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது.
* மணத்தக்காளிக் கீரையை அதன் காய் மற்றும் பழங்களுடன் சேர்த்து இடித்து எடுத்த சாற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டால் கல்லீரல்
மற்றும் கணைய வீக்கம் சரியாகும்.

மணத்தக்காளிப் பழம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. கருவை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
21

Related posts

மிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள்

nathan

இளமை தரும் இளநீர்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! யார் யாரெல்லாம் வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட வேண்டும்?

nathan

சூப்பர் டிப்ஸ்! உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த அக்ரூட்…!

nathan

பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் நீரிழிவை கட்டுப்படுத்தும்!

nathan

கொள்ளு ரசம்..ஏழே நாட்களில் இவ்வளவு நன்மைகளா?

nathan

தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?

nathan

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள் !!

nathan

உங்க ஆண்மை அதிகரிக்க இந்த பழச்சாற்றை தவறாம குடிங்க…!!

nathan