36.6 C
Chennai
Friday, May 31, 2024
8
சைவம்

வெட்டிமுறித்த காய்கறி குழம்பு

தேவையானவை:
கேரட் – ஒன்று
வாழைக்காய் – ஒன்றில் பாதி
கத்தரிக்காய் – ஒன்று
முருங்கைக்காய் – ஒன்றில் பாதி
பெரிய வெங்காயம் – ஒன்று
உருளைக்கிழங்கு – ஒன்று
அரைக்க :
தேங்காய் – ஒன்றில் பாதி
சின்ன வெங்காயம் – 5
பூண்டு – 2 பல்
இஞ்சி – ஒரு துண்டு
மல்லித்தூள் ( தனியாத்தூள் ) – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிமசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
தாளிக்க ;
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டேபிள்ஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு

செய்முறை
காய்களை மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பிறகு,இத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.இத்துடன் உப்பு,நாம் அரைத்து வைத்துள்ள விழுதினை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். ,காய்கள் வேகும் வரை அடுப்பில் வைத்து ,வெந்ததும் இறக்கிப்பரிமாறவும்.
8

Related posts

சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி

nathan

வெண்டைக்காய் பொரியல்

nathan

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

அரிசி பருப்பு சாதம்

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

மிளகு மோர்க்குழம்பு செய்வது எப்படி

nathan

சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி

nathan

வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு

nathan