24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
23 1435053999 5 periods
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பம் குறித்து யாரும் சொல்லாத சில உண்மை விஷயங்கள்!!!

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கட்டம். இக்காலத்தில் பெண்களின் மனநிலை மற்றும் உடல் நிலையில் நிறைய வேறுபாடுகள் ஏற்படும். சிலர் கர்ப்பம் என்றால் ஒருசில அறிகுறிகள் நிச்சயம் இருக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் மாற்றங்களில் வேறுபாடுகள் இருக்கும்.

உதாரணமாக, கர்ப்ப காலத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் காலைச் சோர்வு ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் இது அனைவருக்குமே இருக்காது. ஒருசிலர் மட்டுமே இப்பிரச்சனையை சந்திப்பார்கள். மேலும் பிரசவ வலி ஆரம்பித்த உடனேயே குழந்தை பிறந்துவிடும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் அது தவறு. இதுப்போன்று பல விஷயங்களை ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

சரி, இப்போது கர்ப்பம் குறித்து யாரும் சொல்லாத சில உண்மை விஷயங்கள் குறித்துப் பார்ப்போமா!!!

உணவின் மீது ஆசை

திரைப்படங்களில் கர்ப்பமாக இருக்கும் போது மாங்காய், ஊறுகாய், சாம்பல் போன்றவற்றை சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழும்படி காண்பிப்பார்கள். ஆனால் உண்மையில் அதுப்போன்று அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தான் இருக்கும். சில பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்போதும் போது சாதாரணமாகத் தான் சாப்பிடுவார்கள்.

காலைச் சோர்வு

எப்படி உணவின் மீது ஆசை எழும் என்ற கருத்து மக்களிடையே உள்ளதோ, அதேப்போன்று தான் காலைச் சோர்வும். உண்மையில் பல பெண்களுக்கு காலையில் மிகுதியான சோர்வு இருக்கும். அதே சமயம் சில பெண்களுக்கு இப்பிரச்சனையே இருக்காது. மாறாக எப்போதும் போன்றே நன்கு சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

குழந்தை உடனே பிறக்காது

திரைப்படங்களில் பிரசவ வலி குறித்து காண்பிக்கும் காட்சிகள் முற்றிலும் தவறானவை. ஏனெனில் எப்போது பனிக்குடநீர் உடைந்து வலி ஆரம்பமாகிறதோ, அதற்கு பின் குழந்தை பிறப்பதற்கு போதிய நேரம் இருக்கும்.

பிரசவத்திற்கு பின் 6 வாரங்கள் கழித்தே மாதவிடாய்

பிரசவத்திற்கு பின் ஆறு வாரங்கள் கழித்து தான் மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்பதால், பெண்கள் அப்போது தயாராக இருக்கவும். மேலும் இதையும் யாரும் வெளிப்படையாக சொல்லிக் கொண்டு இருக்கமாட்டார்கள். எனவே தயாராக இருங்கள்.

பிரசவத்திற்கு பின் சில நாட்கள் அமைதி காக்கவும்

பிரசவம் முடிந்த சில நாட்களுக்குள்ளேயே பலரும் தங்களின் பழைய உடலமைப்பைப் பெற முயற்சியில் இறங்குவார்கள். ஆனால் அப்படி செய்வதை நிறுத்திவிட்டு, ஒரு வருடம் அமைதியாக நன்கு ஓய்வு எடுப்பதோடு, நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருவதே சிறந்தது. Show Thumbnail

ஸ்ட்ரெட்ச் மார்க் ஆயின்மெண்ட்

வேஸ்ட் வெற்றிகரமாக பிரசவம் முடிந்த பின்னர், பெண்களுக்கு ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் இருக்கும். இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்க பலரும் கடைகளில் விற்கப்படும் ஆயின்மெண்ட்டைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் சிலருக்கு போகாமல் அப்படியே இருக்கும். இதற்கு பரம்பரை தான் காரணம். உங்கள் அம்மாவிற்கு ஸ்ட்ரெட்ச் மார்க் இன்னும் இருந்தால், உங்களுக்கும் அது கண்டிப்பாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதையும் யாரும் சொல்லமாட்டார்கள்.

நல்ல டயட்

பிரசவம் முடிந்த பின்னர் நல்ல ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு, குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டுமே தவிர, எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. இக்காலத்தில் சரியான உணவுடன், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, சுறுசுறுப்புடன் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே, உடலை சரியான எடையில் பராமரிக்கலாம்.
23 1435053999 5 periods

Related posts

சுகப்பிரசவம் சாத்தியமா?

nathan

கர்ப்பிணிகள் எதிரில் பேச கூடாத வார்த்தைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்

nathan

வீட்டிலேயே செர்லாக் பவுடர் செய்வது எப்படி?

nathan

பிரசவத்தில் போது பெண்கள் மரணமடைவதற்கான பொதுவான காரணங்கள்

nathan

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?

nathan

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏன் கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியுமா?

nathan

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க டிப்ஸ்

nathan

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவை

nathan