womencare
கர்ப்பிணி பெண்களுக்குஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

பிரசவத்திற்கு பின்னரான உடல் பராமரிப்பு

உச்சி முதல் பாதம் வரை கர்ப்பிணியின் உடலுக்குள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துவது கர்ப்ப காலம். உடல் பருக்கும். சருமத்தில் கரும்புள்ளிகளும் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். வாயைச் சுற்றிய சருமம் உலர்ந்துபோகும். கருவைச் சுமந்த வயிற்றில் தழும்புகள் ஏற்படும். கொத்துக் கொத்தாகக் கூந்தல் உதிரும். இவை எல்லாமே தற்காலிகமானவைதான். பத்து மாதங்கள் உடலுக்குள் நிகழ்ந்த ஹார்மோன் மாற்றங்கள்

womencare
எல்லாம் சகஜ நிலையை அடைந்ததும் சருமத்திலும் கூந்தலிலும் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகிவிடும். ஆனால், அதற்குச் சில மாதங்கள் ஆகலாம். வேலைக்குச் செல்கிற பெண்களுக்கு அந்தத் தற்காலிக மாற்றங்கள் கவலையளிக்கலாம். கொஞ்சம் மெனக்கெட்டால் சீக்கிரமே பழைய அழகுக்குத் திரும்பலாம்.

சருமத்தில் ஏற்பட்ட வறட்சி, கரும்புள்ளிகள் மற்றும் நிற மாற்றம் போன்றவை மறைய….

(தினமும் செய்ய வேண்டும்)

காலை

முகம் கழுவியதும் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்து கழுவ வேண்டும். சருமத்தில் லேசான ஈரப்பதம் இருக்கும்போதே மாய்ஸ்சரைசர் தடவவும்.

மதியம்

உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

இரவு

நான்கு பாதாம் பருப்புகளை ஊறவைத்து நன்றாக அரைத்து அத்துடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவவும்.

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் துத்தநாகக் குறைபாட்டினால் சருமத்தில் பல பிரச்னைகள் ஏற்படும். துத்தநாகச் சத்து நிறைந்த கோழி, முட்டை, முழு தானியங்கள், பாதாம், தயிர் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும். காபி, டீ தவிர்த்து கேரட் ஜூஸ், கொழுப்பு நீக்கிய பால் குடிக்கவும். தினமும் மதிய உணவில் ஒரு கீரை சேர்த்துக் கொள்ளவும்.

மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம். தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். இரவில் குங்குமப்பூ கலந்த பால் குடிக்கவும்.

குழந்தை தூங்கும்போது ஓய்வாகச் செய்ய வேண்டியவை…

ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து கைகால் களுக்குத் தடவிக்கொண்டு குட்டித் தூக்கம் போடவும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இந்த சிகிச்சை கைகால்களின் சருமத்தில் ஏற்பட்ட நிற மாற்றத்தை நீக்கி, மென்மையாக வைக்கும்.

இரண்டு டீஸ்பூன் ஓட்ஸுடன் பாதி தக்காளி சேர்த்து அரைத்து, கழுத்துப் பகுதியில் கருமை படர்ந்த இடத்தில் தடவினால் மாற்றம் தெரியும்.

பிரசவத்துக்குப் பிறகான முடி உதிர்வுக்கு…

ஒரு கப் தேங்காய் எண்ணெயில் இரண்டு பல் பூண்டு, இரண்டு சாம்பார் வெங்காயம், கால் டீஸ்பூன் வெந்தயம் இந்த மூன்றையும் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தலைக்குக் குளிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன் இந்த எண்ணெயை லேசாகச் சூடு செய்து தலையில் தடவி மசாஜ் செய்து கெமிக்கல் இல்லாத ஷாம்பூ உபயோகித்து அலசவும்.

பிரசவத் தழும்புகள் மறைய…

எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன், பாதாம் எண்ணெய் அரை டீஸ்பூன், வைட்டமின் ஈ எண்ணெய் அரை டீஸ்பூன், கற்றாழை ஜெல் அரை டீஸ்பூன்… இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். தினமும் இரவில் தழும்புகளின் மேல் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து காலையில் கழுவ வேண்டும்.

Related posts

பனிக்குடம் உடைதல் பற்றி பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது

nathan

இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!…தெரிஞ்சிக்கங்க…

nathan

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவை

nathan

ஆஸ்துமா பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனை

nathan

‘கால்சியம் பற்றாக்குறை எப்போது ஏற்படும்?”

nathan

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள்

nathan

குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாகத் தோற்றமளிக்க

nathan

நடுத்தர வயது பெண்களை தாக்கும் கருப்பை கட்டியின் அறிகுறியும், சிகிச்சையும்

nathan

மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன தெரியுமா?

nathan