32.2 C
Chennai
Monday, May 20, 2024
6c20818f d756 4e28 af47 c0abd0d590c6 S secvpf
கர்ப்பிணி பெண்களுக்கு

எப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் தெரியுமா?

பிறந்த குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால். மேலும் தாய்ப்பால் தான் குழந்தையின் முக்கிய உணவும் கூட. தாய்ப்பாலின் மூலம் தான் குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, குழந்தையின் வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதும் தாய்ப்பாலே.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு எழும் ஓர் கேள்வி, எப்போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பது தான். எப்போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

* பொதுவாக குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பின், குழந்தைக்கு வெறும் தாய்ப்பால் மட்டும் போதாது. அவர்களுக்கு இக்காலத்தில் பசி அதிகம் இருக்கும். எனவே உங்கள் குழந்தை அடிக்கடி பசியால் அழுதால், அவர்களுக்கு தாய்ப்பாலின் அளவைக் குறைத்து, ஓரளவு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம்.

* தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதால், மகப்பேறு விடுப்பானது 6-9 மாதம் வரை தான் இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் வேலைக்கு செல்லும் முன், குழந்தைக்கு மற்ற உணவுகளையும் கொடுத்துப் பழக்குங்கள். அதிலும் 6 மாதத்திற்கு பின் குழந்தைக்கு மற்ற உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். இதனால் குழந்தை தாய்ப்பாலை எதிர்பார்த்து இருக்காது.

* குழந்தைக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்து விட்டால், அவர்கள் எதிர்பாராதவிதமாக தாய்ப்பால் கொடுக்கும் போது கடிக்க ஆரம்பிப்பார்கள். அப்படி உங்கள் குழந்தை கடிக்க ஆரம்பித்தால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

* குழந்தைக்கு 6 மாதத்திலேயே திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்துவிடுவதோடு, 2 வயதிற்குள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

* தாய்மார்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து, அதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

6c20818f d756 4e28 af47 c0abd0d590c6 S secvpf

Related posts

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி!

nathan

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்

nathan

உங்களுக்கு தெரியுமா விட்டத்தை பார்த்தபடி கர்ப்பிணிகள் உறங்கினால் என்னவாகும்..?

nathan

கர்ப்ப காலமும் உடல்பருமனும்

nathan

பிரசவ வலி குறைய உதவும் குங்குமப்பூ!

nathan

குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன தெரியுமா?…

sangika

முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கை!…

sangika

கர்ப்பிணி உயரம் குறைவு காரணமாக குறைப்பிரசவம் அதிகம் ஏற்படுகிறதா?

nathan

பெண்கள் ஏன் சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்கிறார்கள் என்று தெரியுமா?

nathan