சமையல் குறிப்புகள்

செட்டிநாடு மசாலா சீயம்

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி – 1/2 கப்

* உளுத்தம் பருப்பு – 1/2 கப்

* வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மிக்சரில் போட்டு, லேசாக நீர் தெளித்து தெளித்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, உப்பு தூவி வதக்கி, துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு வதக்கி வைத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், மாவை உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான செட்டிநாடு மசாலா சீயம் தயார்.

குறிப்பு:

* மாவை எண்ணெயில் போடும் போது வட்ட வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

* மாவை கிரைண்டரில் போட்டு அரைத்தால் மாவு இன்னும் மெதுமெதுவென்று வரும்.

* நீங்கள் அரைத்த மாவு மிகவும் நீராக இருந்தால், அத்துடன் சிறிது அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக சேர்த்து விட வேண்டாம்.

* பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தினால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

Related posts

சுவையான திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணி

nathan

படியுங்க எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?

nathan

என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

nathan

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika

உருளைக்கிழங்கு குருமா

nathan

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட… ஜீரண சக்தி அதிகரிக்கும்!…

sangika

சுவையான கத்திரிக்காய் சாம்பார்

nathan

கலர்பொடி சேர்க்காமல் கிரேவியில் நிறத்தை கொண்டு வரமுடியுமா?

nathan

சளிக்கு இதமான… மிளகு பூண்டு குழம்பு

nathan