29.8 C
Chennai
Monday, Jul 13, 2026
அசைவ வகைகள்

சோயா இறைச்சி பொரியல்

தேவையான பொருட்கள்

2 பேருக்கு

50 கிராம் – சோயா மீற்/ chunks/இறைச்சி
2- பெரிய சிவப்பு வெங்காயம்
3 தே.கரண்டி – யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள் இருக்கிறதாலை நம்ம ஊர் கறி தூளுக்கு யாழ்ப்பாண கறி தூள் எண்டு பெயர் போட்டிருக்கும்)
சுவைக்கேற்ப – உப்பு
1/4 தே. கரண்டி – மஞ்சள் தூள்
5 மேசை கரண்டி – நல்லெண்ணேய்/ சூரிய காந்தி எண்ணேய்
3 கப் – சுடு நீர்
2 நெட்டு – கறி வேப்பிலை
1- தேசிக்காய்

செய்முறை

நன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும்
வெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும்
வெங்காயத்துக்கு சுவைக்கேற்ப உப்பு, 2 தேக்கரண்டி கறித்தூளை சேர்த்து கிளறி 2 நிமிடம் வைக்கவும்
ஊறிய சோயா சோயா இறைச்சியை வடிகட்டி எடுத்து குளிர் நீரில் களுவி கொள்ளவும், பெரிய துண்டுகளாக இருந்தால் சிந்தாமணி கடலை அளவு துண்டுகளாக வெட்டவும், (சந்தையில் சிறிய துண்டுகாள உள்ள சோய இறைச்சியும் கிடைக்கும், அதை வெட்டி துண்டாக்க தேவையில்லை)
வெட்டிய/ வடி கட்டி எடுத்த சோயா துண்டுகளுக்கு 1 தே கரண்டி கறித்தூள், மஞ்சள், உப்பு என்பவற்றை போட்டு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்
பொரிக்கும் (அடிப்பிடிக்காத/ ஒட்டாத/ non stick) சட்டியில் 3 மேசகரண்டி எண்ணேய் விட்டு மென்சூட்டில் சூடக்கி அதில் கறித்தூள், உப்பில் பிரட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வெங்காயம் மெதுமையாக வரும் வரை வதக்கவும்/ பொரிக்கவும்
வெங்காயம் வதங்கி வந்ததும் ஊற வைத்த சோயா இறைச்சியை கொட்டி, மிகுதியாக இருக்கும் எண்ணேயை சேர்த்து மேலும் ஒரு 2-3 நிமிடம் கிளறி, கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும்
பொரியல் சாப்பிடக்கூடிய சூட்டை அடைந்ததும் புளிப்பு சுவையை விரும்புபவர்கள் பாதி தேசிக்காயை பிளிந்து, நன்கு கிளறவும்
இப்போ சுவையான சோயா இறைச்சி பொரியல் தயார்.
இதனை சோறு, புட்டு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

Related posts

சூப்பரான ஐதராபாத் சிகம்புரி கபாப்

nathan

செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்

nathan

செட்டிநாடு எலும்பு குழம்பு

nathan

சுவையான கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரை

nathan

மாட்டிறைச்சி பிரியாணி செய்முறை ,மாட்டிறைச்சி பிரியாணி எப்படி சமைக்க வேண்டும்,tamil samayal biryani,tamil easy samayal

nathan

Easy சிக்கன் 65 : செய்முறைகளுடன்…!

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானி

nathan

சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட்

nathan