23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
chanabuttermasalarecipe 1614671018
சமையல் குறிப்புகள்

சன்னா பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:

* சன்னா – 1 கப்

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* காய்ச்சிய பால் – 1/4 கப்

* மலாய் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்

* உலர்ந்த வெந்தய கீரை – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு…

* வெண்ணெய் – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 2 (நறுக்கியது)

* தக்காளி – 3 (நறுக்கியது)

* முந்திரி – 6

* பச்சை மிளகாய் – 1

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சன்னாவை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். சன்னாவானது நன்கு மென்மையாக வெந்திருக்க வேண்டும். ஒருவேளை வேகவில்லை என்றால் மீண்டும் ஒரு 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைக்கவும்.

* பிறகு வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், சேர்த்து வதக்கி, பின் அரைத்ததை சேர்க்கவும்.

* பின் அதில் மல்லித் தூள் மற்றும் பால் ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

* அதன் பின் வேக வைத்துள்ள சன்னாவை வேக வைத்த நீருடன் ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

* இறுதியில் கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை, பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே சிறிது வெண்ணெயைப் போட்டு மூடி வைத்தால், சுவையான சன்னா பட்டர் மசாலா தயார்.

குறிப்பு:

* உங்களுக்கு சற்று இனிப்புச் சுவை வேண்டுமானால், அதில் சிறிது சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.

* விருப்பமுள்ளவர்கள் முந்திரியை தனியாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

* ஒருவேளை சன்னாவை இரவு நேரத்தில் ஊற வைக்க மறந்துவிட்டால், பகலில் நல்ல சூடான நீரில் சன்னாவைப் போட்டு, 5-6 மணிநேரம் மூடி வைத்து ஊற வையுங்கள்.

* க்ரீம் இல்லாதவர்கள், அதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

* முந்திரி இல்லாவிட்டால், அதற்கு பதிலாக பாதாமை சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

சுவையான தக்காளி குருமா

nathan

சுவையான வெண்டைக்காய் பாதாம் மசாலா

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு குடைமிளகாய் வறுவல்

nathan

காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

மாலை வேளையில் முட்டை கொத்து பாஸ்தா

nathan

சுவையான கடாய் காளான் கிரேவி

nathan

மணமணக்கும்.. மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan

சுவையான ப்ராக்கோலி சப்ஜி

nathan

முருங்கைக்காய் மசாலா பிரட்டல்

nathan