சரும பராமரிப்பு

டாட்டூ மோகம் ஓர் எச்சரிக்கை பதிவு

இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் தலைக்கு வர்ணம் அடிக்கவும் ஹென்னா போடவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

உடலில் டாட்டூ வரைந்து கொள்வதும் இன்றைய இளைஞர்களிடையே பேஷனாகி வருகிறது.

*ஹென்னா பயன்படுத்துவதாலோ, டாட்டூ வரைவதாலோ லுக்கீமியா புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

உடலை பாதிக்கும் ரசாயணம்

*நமது உடலில் உள்ள மரபணுவை நேரடியாக சென்று தாக்கக் கூடிய கார்சினோஜினிக் என்னும் ரசாயனம் ஹேர்டையில் கலக்கப்படுவதால் அவை தலைக்கு தடவும் போது தலைமுடிகளில் வேர் பகுதிகளின் மூலம் உடலில் ஊடுருவி ரத்தத்தில் கலந்து விடுகின்றன.

*கார்சினோஜினிக் நச்சுப்பொருட்கள் சிறுநீரகப்பையில் நிரந்தரமாக தங்கிவிடுவதால் இவை லிம்போமா என்னும் புற்றுநோய் ஏற்படக்காரணமாகிறது என்கின்றனர் புற்றுநோய் வல்லுநர்கள்.

பிற வண்ணங்களைக்காட்டிலும் கருப்புநிற சாயங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்கள் அதிகம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பென்சின்

*இது மட்டுமல்லாது அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பதற்காகவும், நிறம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் செயற்கை மருதாணி எனப்படும் ஹென்னாவை பயன்படுத்துகின்றனர்.

*இந்த ஹென்னாவில் கலக்கப்படும் பென்சின் ரசாயனம்தான் லுக்கீமியா எனப்படும் ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் பாதிப்பிற்கு காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

அழகுக்காக டாட்டூ வரைந்து கொள்வதும் ஆபத்தானது என்கின்றனர் புற்றுநோய் மருத்துவர்கள்.

*பென்சின் கலக்கப்பெற்ற அழகு சாதன பொருட்கள் பயன்படுத்த வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவை எளிதில் கிடைக்கின்றன.

*இவை புற்றுநோய் மட்டுமல்லாது தோல்நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

எனவே அவசியமற்ற தருணங்களில் தலைமுடியும் சாயம் தடவுவதையும் தரமற்ற செயற்கை மருதாணி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்கள் ஆலோசனை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button