paatttti
இலங்கை சமையல்

எங்கள் பாட்டி வைக்கும் சிக்கன் கொழம்பு

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள் :
கோழி 1 கிலோ
வெங்காயம் 3
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 2 மேசைகரண்டி
பச்சை மிளகாய் 2
கடல்பாசி 4
கறிவேப்பில்லை 1 கொத்து
கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
லெமன் ஜூஸ் 4 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசைகரண்டி
உப்பு தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

தனியா 7 மேசைகரண்டி
சீரகம் 1/2 மேசைகரண்டி
சோம்பு 1 மேசைகரண்டி
மிளகு 2 மேசை கரண்டி
கசகசா 2 மேசைகரண்டி
பட்டை 3 துண்டு
கிராம்பு 3
ஏலக்காய் 4
ஜாதிபூ 4
அன்னாசி பூ 1
வரமிளகாய் 10
தேங்காய் 2 மேசைகரண்டி
பொட்டுகடலை 1 மேசைகரண்டி

மேற்குறிய அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனி தனியாக வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும் .
தயாரிக்கும் முறை

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள் , லெமன் ஜூஸ் சேர்த்து குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடல் பாசி,பிரியாணி தலை போட்டு வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் .

வதங்கிய பிறகு இஞ்சிபூண்டு விழுதை சேர்க்கவும் .நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.

இப்போது தக்காளி சேர்க்கவும்.2 நிமிடம் கழித்து சிக்கனை போட்டு அரைத்த மசாலா தூள் ,மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.அனைத்து மசாலா பொருட்களும் சிக்கன் உடன் சேர்ந்து 5 நிமிடம் வதக்க வேண்டும் .

பிறகு தண்ணீர் 1 கப் அல்லது தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் .

சிக்கன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:

இட்லி,கல்தோசை,சாப்பாத்தி ,பரோட்டா,சாதம் அனைத்துடனும் சாப்பிட காரசாரமாக ,சுவையாக இருக்கும்.paatttti

Related posts

இட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

nathan

பிரெட் ஜாமூன்

nathan

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan

பஞ்சரத்ன தட்டை

nathan

இலங்கையரின் வறுத்தரைச்ச நாட்டுக்கோழி கறி…

nathan

முருங்கைக்காய் சாம்பார் / Drumstick sambar tamil

nathan

சூப்பரான யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)

nathan

மங்களூர் மினி கைமுறுக்கு

nathan

யாழ்ப்பாணத்து குழல் புட்டு

nathan