26.5 C
Chennai
Saturday, Nov 30, 2024
sk f
இலங்கை சமையல்

ஆட்டிறைச்சி – பிரட்டல் கறி – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள்.
இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது

தேவையான பொருட்கள்:
ஆட்டிறைச்சி இறைச்சி – 1 கிலோ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை
வெண்காயம் – 2 பெரிய வெண்காயம் நீள்மாக வெட்டப் பெற்றவை
சிறிய உருளை கிழங்கு. பெரிதாயின் பாதி போதுமானது – சீவி சிறு துண்டுகளாக வெட்டியவை
பச்சை மிளகாய் – 5 மிளகாய் நீட்டாக வெட்டப் பெற்று இரண்டு துண்டாக்கப்பெற்றவை
உள்ளி: 5 – 6 பற்கள் நீளமாக பிளந்து இரண்டாக வெட்டப் பெற்றவை
கடுகு, பெருஞ்சீரகம் – 1 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை – 2 -3 காம்பு
றம்பை – சிறிதாக வெட்டிய 8-20 துண்டுகள்

எண்ணெய் – தெவையான அளவு
சரக்கு மிளகாய்த்தூள் – (தேவைக்கேற்ப 2-3 தேக்கரண்டி)
உப்பு – தேவையான அளவு
தேசிக்காய் – பாதி போதுமானது
எண்ணெய்: தேவையான அளவு

செய்கை முறை:
வெட்டி சுத்தமாக்கிய ஆட்டிறைச்சியை, சிறிதளவு உப்பும், கறிமிளகாய் தூளும் சேர்த்து குழைத்து வைக்கவும்.

கறிச்சட்டியில் எண்ணெயை விட்டு சூடாக்கவும் (கறிச் சட்டி ஒட்டாத நொன் ஸ்ரிக்காக இருப்பது நல்லது).

எண்ணெய் சூடு ஏறியதும் கடுகை போட்டு வெடித்ததும், பெருஞ்சீரகம், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும் பின்பு வெட்டிவைத்த வெண்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்து வதங்கி வரும் போது, குழைத்து வைத்த இறைச்சியை சட்டியிலிட்டு பிரட்டி மூடிவிடவும்.

இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும் சட்டியில் உள்ள எண்ணெயிலும் அவிந்து பொரிய விடவும். இடைக்கிடை எரிந்து போகாது இருக்க அகப்பையால் துளாவி விடவும்.

இறைச்சி முக்கால் பதம் பொரிந்ததும் அதற்குள் தேவையான சரக்கு மிளகாய் தூளையும், சிறு துண்டுகளாக வெட்டிய உறுளைக்கிழங்கையும், கணக்காக உப்பும் போட்டு கொஞ்ச தண்ணீரும் சேர்த்து கொதித்து அவிய மூடிவிடவும்.

ஆட்டிறைச்சி அவிந்ததும் நெருப்பைக் குறைத்து பொடுபொடுக்கும் அளவிற்கு (நீர் வற்றும் வரை) அடுப்பில் விடவும். அதன் பின் கருவேப்பிலையைப் போட்டு பிரட்டி மூடிய பின் அடுப்பை அணைத்துவிடவும்.

சிறிது நேரத்தின் பின் இறக்கி எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். இப்போது ஆட்டிறைச்சி பிரட்டல் றெடி.

குறிப்பு: சிலர் உறுளைக் கிழங்கு போடுவது இல்லை. உருளைக்கிழங்கு போட்டால் கறி தடிப்பாக இருக்கும். உறைப்பு தேவைக் கேற்ப மிளகாய் தூளை கூட்டியும் குறைத்தும் பாவிக்கலாம்.
இன்னும் சிலர், மசாலைகளை வதக்காது பிறிம்பாக அரைத்தெடுத்து இறைச்சியுடன் போட்டும் சமைப்பார்கள். வினகர் சேர்த்தால் இறைச்சி மெதுமெதுப்பாக இருக்கும். ஆனால் சிலர் விரும்புவதில்லை. இஞ்சி ஒரு சிறுதுண்டை சிரியதாய் சீவி அல்லது குத்திப் போட்டும் சமைப்பார்கள் இஞ்சி இறைச்சியை மெதுமயானதாக்கும் என்பர்.
sk f

Related posts

முருங்கைக்காய் சாம்பார் / Drumstick sambar tamil

nathan

யாழ்ப்பாணத்து குழல் புட்டு

nathan

எங்கள் பாட்டி வைக்கும் சிக்கன் கொழம்பு

nathan

கொத்து ரொட்டி srilanka recipe tamil

nathan

கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு

nathan

இலங்கை ஸ்டைலில் சுவையான ஜவ்வரிசி கஞ்சி…

nathan

மைசூர் போண்டா

nathan

நீலக்கால் நண்டுக்கறி – யாழ்ப்பாணம் முறை

nathan

சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்கு

nathan