31.7 C
Chennai
Sunday, May 18, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முதல் முறையாக பார்லர் போகும் போது..

ld200முதல் முறையாக நாம் பார்லர் போகும் போது அங்கு சொல்லப்படும் விஷயங்களும், க்ரீம்களின் வகைகளும் நமக்கு ஒன்றும் புரியாது.

முதல் முறையாக ஒரு பார்லருக்கு போனதும் பேஷியல், ப்ளீச்சிங் செய்து கொள்ள வேண்டாம்.

எந்த பார்லருக்கு சென்றாலும் முதலில் ஐப்ரோ செய்வது, பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவை செய்து கொள்ளுங்கள்.

இதிலேயே அந்த பார்லரைப் பற்றி உங்களுக்குப் புரிந்து விடும். பார்லரில் இருப்பவர்களுக்கும் உங்களது சருமத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

முதலில் ஐப்ரோ செய்தாலே அவர்களது வேலை எப்படி இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். முகத்தை அழகாக வைத்துக்

கொள்வது புருவங்கள்தான். அதை ஒருவர் அழகாக செய்தால் அவர்களது மற்ற வேலைகளும் நன்றாக இருக்கும் என்று நம்பலாம்.

அவர்களது வேலை நுணுக்கத்தை வைத்தே சொல்லிவிடலாம் அல்லவா?

உடலில் முகம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் எடுத்ததும் முகத்தைக் கொடுத்து விடாமல் இப்படி சின்ன சின்ன

விஷயங்களை செய்து பிறகு அவர்கள் மீது நம்பிக்கை வந்தால் பேஷியல் மற்றும் ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம்.

பேஷியலில் பல வகைகள் உள்ளன. காய்கறி க்ரீம், பழக் க்ரீம், இயற்கைக் கீரம் என பல வகைகள் உள்ளன. விரல் விட்டு எண்ண முடியாத

அளவிற்கு அதில் வகைகள் உள்ளன.
எந்த சருமத்திற்கு எந்த பேஷியல் பொருந்தும்?

பொதுவாகவே எல்லா சருமத்திற்கும் எல்லா பேஷியலும் பொருந்தாது. நம்முடைய சருமத்திற்கு எந்த வகையான பேஷியல் பொருந்துமே

அதைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். இல்லை என்றால், நமது சருமத்திற்கு உள்ள பிரச்சினைகளைக் கூறி, அழகுக் கலை நிபுணரின்

தேர்வுக்கு விட்டுவிடலாம்.

பருக்கள் உள்ளவர்கள் பேஷியல் செய்யலாமா?

பொதுவாக பருக்கள் இருப்பவர்களுக்கு பேஷியல் செய்வதில்லை. அவர்களுக்கு மினி பேஷியல் மட்டுமே செய்யப்படுகிறது. முகத்தை க்ரீம்

கொண்டு சுத்தப்படுத்தி, சில கிரீம்களை போட்டு எளிதான பேஷியல் மட்டுமே செய்யவார்கள்.

பேஷியல் செய்தால் என்ன மாற்றத்தை உணரலாம்?

பேஷியல் செய்யும் போது முகத்தில் உள்ள பிரஷர் பாய்ண்ட்டுகளில் அழுத்தம் கொடுக்கும் போது மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது.

பேஷியல் செய்தாலே நிச்சயமாக ஒரு நல்ல உணர்வை உணர்வார்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு டென்ஷனுடன் வந்தார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியைப் பெறுவார்கள்.

Related posts

சுவையான ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

அழகு குறிப்புகள்:அழகு தரும் பூ…

nathan

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள் சில…அழகு குறிப்புகள்!

nathan

பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு! 2022-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்?

nathan

மீசை போன்ற ரோமங்கள் உதிர

nathan

ஆரஞ்சுப் பழ சருமப் பராமரிப்பிற்கு

nathan

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

தோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்

nathan

அடேங்கப்பா! இந்த போஸில் கீர்த்தி சுரேஷை யாராவது பார்த்ததுண்டா?

nathan