24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
kongunadukozhikuzhambu 16
அசைவ வகைகள்

சுவையான கொங்குநாடு கோழி குழம்பு

தேவையான பொருட்கள்:

குழம்பு மிளகாய் தூள் செய்வதற்கு…

* வரமிளகாய் – 100 கிராம்

* மல்லி விதைகள் – 300 கிராம்

* சீரகம் – 25 கிராம்

* மிளகு – 25 கிராம்

குழம்பு செய்வதற்கு…

* நல்லெண்ணெய் – 1/4 கப்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* ஏலக்காய் – 3

* கிராம்பு – 3

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 2 (நறுக்கியது)

* குழம்பு மிளகாய் தூள் – 3-4 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சிக்கன் – 1/2 கிலோ

* தண்ணீர் – தேவையான அளவு

kongunadukozhikuzhambu 16

செய்முறை:

* முதலில் குழம்பு மிளகாய் தூள் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை லேசாக வறுத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் குழம்பு மிளகாயை தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின் அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கொங்குநாடு கோழி குழம்பு தயார்.

Related posts

மட்டன் சுக்கா

nathan

மீன் வறுவல்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இறால் ஃப்ரைடு ரைஸ்

nathan

சுவையான தயிர் சிக்கன்

nathan

இறால் மக்ரோனி : செய்முறைகளுடன்…!

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

உருளைக்கிழங்கு மட்டன் மசாலா செய்வது எப்படி

nathan

சூப்பரான மிளகு முட்டை வறுவல்

nathan

சில்லி சிக்கன் கிரேவி

nathan