34.1 C
Chennai
Wednesday, May 14, 2025
cce396d0 ff1e 4a18 8e3f 35d7df3ca6cc S secvpf.gif
கால்கள் பராமரிப்பு

கால்கள் கருப்பாக இருக்க. அப்ப இத டிரை பண்ணுங்க

வெயிலின் தாக்கத்தால் முகம், கைக்கு அடுத்தபடியாக பாதிக்கப்படுவது கால்கள். அதுவும், போதிய பராமரிப்பு இல்லாவிட்டால் கால்களில் பித்தவெடிப்பு மற்றும் கருமை நிறத்தில் மாறிவிடும். அதற்கு, அழகு நிலையங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை, மாறாக வீட்டிலேயே சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.

* எலுமிச்சையை துண்டுகளாக்கி, அதில் உப்பு தூவி, அந்த எலுமிச்சை துண்டை கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* பாதங்களுக்கான ஸ்கரப் செய்வதற்கு, 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கால்கள் வெள்ளையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

* ஆரஞ்சு தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

* டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் நிரம்பியுள்ள வாளியில் சேர்த்து கலந்து, அதில் சிறிது ஷாம்பு சேர்த்து கலந்து, அந்த கலவையில் கால்களை 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலும், கால்களில் உள்ள கருமை மறைந்து, கால்கள் பொலிவோடு இருக்கும்.

* ஷாம்பு கலவையில் கால்களை ஊற வைத்து கழுவிய பின்னர், மில்க் க்ரீம் கொண்டு கால்களை 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைந்துவிடும்.cce396d0 ff1e 4a18 8e3f 35d7df3ca6cc S secvpf.gif

Related posts

ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை

nathan

கால்களை பராமரிப்பது எப்படி?

nathan

உங்க பாதமும் இப்படி வெடிச்சிருக்கா? அப்ப இத படிங்க!

nathan

உங்க கால் விரல் இப்படி இருக்கா?

nathan

இங்க சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க பாத வெடிப்பு நீங்கும்

nathan

பாதங்களில் வெடிப்பு காணாமல் போக வேண்டுமா? இதோ அசத்தல் டிப்ஸ்

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

sangika

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால்

nathan