28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
spinachsambar
சமையல் குறிப்புகள்

பசலைக்கீரை சாம்பார்

தேவையான பொருட்கள்:

* பசலைக்கீரை – 2-3 கப் (நறுக்கியது)

* துவரம் பருப்பு – 1/2 கப்

* கருப்பு சுண்டல் – 1/2 கப் (ஊற வைத்தது)

* சின்ன வெங்காயம் – 10-12 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* சாம்பார் பவுடர் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* புளி சாறு – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள சுண்டலையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக்கீரை மற்றும் சாம்பார் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் வேக வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் கருப்பு சுண்டலை சேர்த்து, ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் புளிச்சாறு ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.

* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாரில் ஊற்றி கிளறினால், பசலைக்கீரை சாம்பார் தயார்.

 

Related posts

வெண்டைக்காய் முந்திரி பொரியல் செய்வது எப்படி?

nathan

ருசியான சமையலுக்கு சில ரகசியங்கள்

nathan

மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பது நல்லதா? கெட்டதா? என்று தெரியுமா?

nathan

சுவையான வல்லாரைக் கீரை துவையல்

nathan

ஸ்பெஷல் மாங்காய் பச்சடி

nathan

மாலை வேளையில் முட்டை கொத்து பாஸ்தா

nathan

சுவை மிகுந்த பன்னீர் ஒம்லட்!

nathan

சேனைக்கிழங்கு மசாலா

nathan

தோசை சாண்ட்விச்

nathan