27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
99d5cbe0 ea95 4128 a7c4 79da6f833c30 S secvpf.gif
சைவம்

ருசியான சாமை சாம்பார் சாதம்

தேவையான பொருட்கள்:
சாமை அரிசி – ஒரு கப்
துவரம் பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று (அ)
சாம்பார் வெங்காயம் – 10
தக்காளி – 3
கறிவேப்பிலை – சிறிது கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், உருளை, வாழைக்காய் கலந்து – ஒரு பெரிய கப் சாம்பார் பொடி (மிளகாய் + தனியா) – 3 தேக்கரண்டி நெய் – 2 தேக்கரண்டி உப்பு – சுவைக்கேற்ப மஞ்சள் தூள் – சிறிது தாளிக்க: கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு மிளகாய் வற்றல் – 2 பெருங்காயம் – சிறிது எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி செய்முறை: *சாமை அரிசி மற்றும் துவரம் பருப்பைச் சுத்தம் செய்து ஊற வைக்கவும். காய்களை நறுக்கி வைக்கவும். *குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும். பிறகு உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து சிவக்கவிட்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். *வதங்கியதும் நறுக்கிய காய் கலவையைச் சேர்த்து (வதங்க அதிக நேரம் எடுக்கும் காய்களை முதலில் சேர்த்து சிறிது வதக்கிய பிறகு மற்ற காய்களைச் சேர்த்து வதக்கலாம்), தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். *பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். *அதனுடன் தூள் வகைகளைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிட்டு, 4 முதல் 4 1/2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அரிசி, பருப்புக் கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி சிம்மில் 15 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். கடைசியாக நெய் விட்டு கலந்து கொள்ளவும். *சுவையான சாமை சாம்பார் சாதம் தயார்.

99d5cbe0 ea95 4128 a7c4 79da6f833c30 S secvpf.gif

Related posts

கொத்தமல்லி சாதம் tamil recipes

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்

nathan

சத்தான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி

nathan

வெட்டிமுறித்த காய்கறி குழம்பு

nathan

சுவையான 30 வகை பிரியாணி

nathan

குதிரைவாலி அரிசி பிரியாணி

nathan

சுவையான காளான் குழம்பு

nathan

உடலுக்கு சக்தியை கொடுக்கும் கொள்ளு உருண்டை குழம்பு….

nathan

அரைத்து விட்ட வெங்காய சாம்பார்

nathan