29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
சைவம்

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம். அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க..!

தேவையான பொருட்கள்:

மசாலா அரைத்துக்கொள்ள:

வெங்காயம் – 2
பேல் பூரி – 1
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 5
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை

செய்முறை:

* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.

* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.

* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.

* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

Related posts

தக்காளி குழம்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்

nathan

சோலே பன்னீர் கிரேவி

nathan

வாழைக்காய் சிப்ஸ்

nathan

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்

nathan

முருங்கை பூ பொரியல்

nathan

மோர்க் குழம்பு

nathan