31.3 C
Chennai
Thursday, May 15, 2025
22 63535d3ddd21e
அழகு குறிப்புகள்

ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர்! திருமணமான இரண்டே ஆண்டில் விவாகரத்து…

மேகன் மெர்க்கல் தனது முதல் கணவர் ட்ரிவோர் எங்கில்சனை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மேகனுக்கும் கடந்த 2018ல் திருமணம் நடைபெற்றது. இது மேகனுக்கு இரண்டாவது திருமணம் ஆகும். ஏனெனில் அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளரான ட்ரிவோர் எங்கில்சன் என்பவர் தான் அவரின் முதல் கணவர் ஆவார்.

இருவரும் கடந்த 2004ல் முதன் முதலில் டேட்டிங் செய்தனர். செப்டம்பர் 2011 இல் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதற்கு முன்பு இந்த ஜோடி கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். இதையடுத்து அதே மாதம் ஜமைக்காவில் ட்ரிவோர் – மேகன் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

இவர்களின் திருமண விழா நான்கு நாட்கள் நீடித்தது, திருமண கொண்டாட்டத்திற்குப் பிறகு, இருவரும் தங்கள் புதிய வாழ்க்கையை லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கினர்.

ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர்! திருமணமான இரண்டே ஆண்டில் விவாகரத்து… முதல் கணவரை மேகன் பிரிய காரணம் என்ன? | Meghan Markle Relationship Lifestyle

22 63535d3ddd21e

மேகன் – ட்ரிவோர் தம்பதி ஏழு வருடங்கள் ஒன்றாக இருந்தபோதிலும், அவர்களது திருமணம் இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்தது. அதன்படி இருவரும் 2013ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மேகன் – ட்ரிவோர் பிரிவுக்கு காரணம் என்ன?

சமரசம் செய்ய முடியாத அளவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததே தம்பதியின் பிரிவுக்கு முக்கிய காரணம் ஆகும் என டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்தது.

Suits தொடரில் நடித்ததன் மூல மேகன் திடீரென மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதையடுத்து தம்பதிக்குள் இடைவெளி அதிகரிக்க தொடங்கியது. மேகன் நண்பர் நினாகி இது குறித்து டெய்லி மெயிலில் கூறுகையில், ஒரு கட்டத்தில் மேகன் கனடாவின் ரொறன்ரோவிலும், ட்ரிவோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் வசித்தனர்.

இருவரும் வேறு வேறு இடத்தில் வசித்தது தான் அவர்கள் உறவுமுறையில் சிக்கலை ஏற்படுத்தியது என கூறியிருக்கிறார்.

அரச குடும்ப வரலாற்றாசிரியர் Andrew Morton எழுதிய “Meghan: A Hollywood Princess புத்தகத்தில், ஒருமுறை ட்ரிவோர் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என மேகன் கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் அவர் பிரபலமான நிலையில் தனக்கென புதிய பாதையை உருவாக்கினார். அதன்படி மேகனுக்கு தனது தொழில் மூலமே நிலையான வருமானம் கிடைத்தது, புதிய நண்பர்களை உருவாக்கி கொண்டார், கணவரை அவர் சார்ந்திருக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.

Source:lankasri

Related posts

கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடித்தாலே போதும், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும்.

nathan

தெரிஞ்சிக்கங்க…வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான சில ஆரோக்கிய உணவுகள்!!!

nathan

முதுமையில் இளமை…

nathan

கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் தேங்காய் எண்ணெய்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரித்து கொள்வது எப்படி? இதோ எளிய குறிப்புகள்

nathan

வெளிநாடு ஒன்றில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட இலங்கை பெண் -பதற வைக்கும் தகவல்!

nathan

இரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஜூஸ் உதவுகிறது!…

sangika

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

nathan

தெரிஞ்சிக்கங்க…இல்லத்தரசிகளுக்கு கை கொடுக்கும் சிறுதொழில்கள்

nathan