அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முதுமையில் இளமை…

08-fiftybeautyமனிதனாக பிறந்த யார்தான் எப்போதும் இளமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர்.

அந்த வழிகள் சத்தான உணவுகளை உண்பதன் மூலம் கிடைக்கின்றன.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புகளும் இதில் காணப்படுகின்றன,

கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.

தோல் வறட்சியை நீக்கி முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

young 002

சால்மன்

சருமத்தை மிருதுவாக வைக்க பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை 12 அவுன்ஸ் சால்மன் மீனை உண்ண வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது.

சால்மனில் வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகியவை செறிந்துள்ள ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உடலின் கட்டிகளை குறைக்கிறது. இது நாள்பட்ட நோயின் தீவிரத்தை குறைக்கிறது. மேலும் 50 வயதினை கடந்த பெண்களின் பொதுவான பிரச்சனையான இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.

young 003

பசுமையான இலை கீரைகள்

பசலைக்கீரை, கொலார்டூ கீரைகள், ரோமன் லெட்யூஸ் மற்றும் ஸ்விஸ் கேரட் ஆகியவை வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள பசுமையான காய்கறிகள் ஆகும்.

க்ரீன் கேரட்டில் உள்ள வைட்டமின் பி இதயத்திற்கும், நினைவாற்றலுக்கும் நல்லது. வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மேலும் எண்ணற்ற பச்சை காய்கறிகளில் கண்டறியப்பட்டுள்ள லுடேயின் பார்வை திறனை பாதுகாக்கிறது. பச்சை காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் முகத்தின் கோடுகளையும், சுருக்கங்களையும் தடுக்கிறது.

பொதுவாக பச்சை காய்கறிகளில் காணப்படும் லைகோஃபைன், லூடென் மற்றும் பீட்டா கரோட்டீன் சருமத்தின் முதுமைக்கு காரணமான புறஊதாக் கதிர்களை தடுக்கிறது.

கீரைகளில் காணப்படும் சத்துக்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோய்க்கு எதிராக போரிடுகிறது. மேலும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.

young 004

பூண்டு

பூண்டில் சுவையும், நன்மையும் சம அளவில் கலந்துள்ளன. கல்லீரலின் இயக்கு திறனை அதிகரிக்கவும், நச்சுகளை அகற்றவும் பூண்டு துணை புரிகிறது.செல் சீரழிவினை தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களை தடுக்கிறது.

பட்டியலிலுள்ள மற்ற உணவு வகைகளை போலவே பூண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் செறிந்து காணப்படுகிறது. இது அசாதாரண செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. விழிப்புணர்விற்காக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.

young 005

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button