தேவையான பொருட்கள்:
* காளான் – 200 கிராம்
* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு – 2 பல்
* வெங்காயம் – 1/2
* பச்சை பட்டாணி – 1/4 கப்
* கார்ன் – 1/4 கப்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
க்ரீமிக்கு தேவையானவை…
* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* மைதா – 2 டேபிள் ஸ்பூன்
* பால் – 2 கப்
* உப்பு மற்றும் மிளகுத் தூள்
செய்முறை:
* முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கி, வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காளானை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். காளான் மென்மையானதும், பச்சை பட்டாணி, கார்ன் சேர்த்து நன்கு கிளறி, பின் மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
Mushroom Soup Recipe In Tamil
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து குறைவான தீயில் வைத்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக கிளற வேண்டும்.
* பிறகு பாலை ஊற்றி கெட்டியாக விட வேண்டும். பால் கெட்டியானதும், வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறி கொதிக்க விட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காளான் சூப் தயார்.