26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
brain fry recipe 1603957814
சமையல் குறிப்புகள்

செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்

தேவையான பொருட்கள்:

* ஆட்டு மூளை – 1

* சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* கொத்தமல்லி – சிறிது

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* கிராம்பு – 1

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஆட்டு மூளையை நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும். பின் மூளையில் உள்ள சிவப்பு நரம்புகளை நீக்கிவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, மீண்டும் நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு மூளையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* இப்போது மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து நறுக்கி வைத்துள்ள மூளையை போட்டு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

* பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1/4 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். மசாலாவில் பச்சை வாசனை போனதும், அதேப் போல் நீர் வற்றியதும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல் தயார்.

குறிப்பு:

* ஆட்டு மூளை வேகமாக வெந்துவிடும். எனவே நீண்ட நேரம் வேக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

* ஆட்டு மூளை மிகவும் மென்மையாக இருப்பதால், சமைக்கும் போது பார்த்து கையாளுங்கள்.

* மேலே மிதமான அளவில் தான் காரம் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு காரமாக வேண்டுமானால், 2 வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

சுவையான காலிஃப்ளவர் மசாலா தோசை

nathan

சுவையான மல்லிகைப் பூ போல இட்லி வேண்டுமா?

nathan

சுவையான சீஸ் ஆலு பன்ச் ரெடி..

sangika

சுவையான பட்டர் குல்ச்சா

nathan

சுவையான தஞ்சாவூர் கதம்ப சாதம்

nathan

சூப்பரான சில்லி பன்னீர் ரெசிபி

nathan

இறால் புளிக்குழம்பு செய்யலாம்

nathan

உருளைக்கிழங்கு குருமா

nathan

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….

sangika