28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
454 teenage skin care
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்கள் இளமையைப் பாதுகாக்க

வெப்பம், நீர், காற்று ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான் நமது உடலில் நோய் உண்டாகிறது.

உடல் உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியைக் கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள் :

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதைப் பற்றி சித்தர் கூறும் பாடல்.

“காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் எனத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி என்றும் இளமையோடு வாழலாம்.
454 teenage skin care

Related posts

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்: இரத்தசோகை காரணமா?

nathan

குறட்டையினால் ஏற்படும் விளைவுகள்!…

sangika

புரிந்துணர்வின்மை காரணமாக உறவுச்சிக்கலோடு இருப்பவர்கள், ஜோடியாக `ஆர்ட் தெரபி’க்கு செல்லுங்கள்!

nathan

உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’

nathan

தெரிந்துகொள்வோமா? ஆப்பிளில் மறைந்திருக்கும் பலருக்குத் தெரியாத ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க… நெஞ்சை அறுப்பது போன்ற வறட்டு இருமலுக்கு 7 எளிய வீட்டு வைத்திய முறைகள்!

nathan

ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

nathan

சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள்

nathan