25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 1568284933
ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் வயிற்று சுருக்கங்கள் எதனால் ஏற்படுகிறது.

சுருக்கங்கள்சில பெண்கள் கர்ப்பமான உடனேயே வயிற்றுப் சுருக்கங்கள்பற்றி கவலைப்படுவார்கள். பிரசவ வலி என்பது கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு நீங்கள் அனுபவிக்கக்கூடிய ஒன்று. ஆனால் உங்கள் குழந்தை உடனடியாக வெளியே வரும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் இது ஒரு பொதுவான அறிகுறியாகும்.

 

கருப்பை
கருப்பை தான் உங்கள் குழந்தையைச் சுற்றி இருக்கும். கருப்பையில் இருக்கும் தசைகளில் சுருக்கம் ஏற்படுவதால் தான் பிரசவ காலம் எளிதாகிறது. அதாவது கருப்பையில் இருக்கும் தசை சுருக்கம் குழந்தைகள் வெளிவருவதற்கான வேலையை செய்கின்றனர். மேலும் இந்த கருப்பை தசை சுருக்கங்கள் உங்களின் பிறப்பு உறுப்பு வழியாக குழந்தைகள் வெளிவர உதவுகின்றன. உண்மையில் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்கள் உங்களுக்கு நன்மையில் தான் முடியும். இதற்காக நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அதாவது வயிற்றில் ஏற்படும் இந்த இறுக்கம் மற்றும் வழி உங்கள் பிரசவ காலத்தின் போது குழந்தை திரும்புவதற்கு உதவும். இதனால் உங்கள் பிரசவம் மிக எளிதானதாக மாறும்.

 

ஆரம்பகால சுருக்கங்கள்

சுருக்கங்கள் உங்கள் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் கூட உங்களுக்கு ஏற்படலாம். இந்த சுருக்கங்கள் ஏற்படும் போது வயிற்று பகுதி சற்று கனமாக மற்றும் வலியுடன் இருப்பதை உணருவீர்கள். கருப்பையை சுற்றியுள்ள தசைகள் விரிவடைவதால் சுருக்கங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் உங்களுக்கு நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் வாயு வலிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அல்லது இரத்தபோக்கு போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம். உங்களுக்கு உண்மையாக கருப்பையில் சுருக்கங்கள் தான் ஏற்படுகிறதா அல்லது அது சாதாரண வலியா என்பதை நீங்களே கண்டுபிடித்து விடலாம். படுத்துக்கொண்டு உங்கள் கருப்பை இருக்கும் இடத்தில் கை வைத்துப் பாருங்கள். தசைப்பிடிப்பு அதாவது சுருக்கங்கள் ஏற்படும் போது உங்கள் கருப்பை முழுவதும் வலித்தால் அது சுருக்கங்கள் தான் அல்லது ஒரு சில பகுதி மட்டும் வலித்தால் அது குழந்தை அசைவினால் ஏற்படும் வலி என்று அர்த்தம்.

முன்கூட்டிய சுருக்கங்கள்

நீங்கள் கர்ப்பமாகி 34 வது வாரத்திற்குப் பிறகு ஏற்படும் சுருக்கங்கள் வந்து வந்து போகக் கூடிய ஒன்றாக இருக்கும். இவை ஒழுங்கற்ற முறையில் ஏற்படும் ஒன்றாகவும் இருக்கும். இந்த சுருக்கங்கள் இடைவெளி விட்டு உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டால் அதவாது 10 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் அடிக்கடி ஏற்படும் போது உங்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். உங்கள் மருத்துவரிடம் சென்று சோதியுங்கள். ஒரு வேலை குறைப் பிரசவத்திக்கான அறிகுறிகள் இல்லை என்று அவர் கூறினால் நீங்கள் நிறைய தண்ணீர் குடிங்கள், சூடான நீரில் குளியல் எடுங்கள், மற்றும் சிறுநீர் கழியுங்கள். உங்கள் சிறுநீர் பையை காலியாக்குவதன் மூலமும், நல்ல மூச்சு பயிற்சி மூலமும் உங்கள் தசைபிடிப்பை சரி செய்ய முடியும்.

உடலுறவு சுருக்கங்கள்

கர்ப்ப காலத்தின் போது உடலுறவு வைத்துக் கொள்ளுவது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்று சிலர் கூறுவார்கள் அவ்வாறான கருத்துக்கள் ஏதும் இல்லை. ஆனால் உடலுறவுக்கு பின்பு ஏதேனும் இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் அல்லது வலி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.

பின் சுருக்கங்கள்

தசைப்பிடிப்பு ஏற்படும் போது உங்களுக்கு முதுவலியும் ஏற்படக் கூடும். அதாவது உங்கள் இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படும். குழந்தை உங்களின் பிறப்பு உறுப்பு வழியாக வெளிவர இருப்பதால் இடுப்பு பகுதியில் இருக்கும் எலும்புகள் விரிவடைவதால் ஏற்படும் வழியாகும். குழந்தை வயிற்றில் மேல் இருந்து தலைகீழ் பகுதிக்கு திரும்புவதால் அங்கிருக்கும் எலும்புகளுக்கு அழுத்தத்தை கொடுக்கும். இதனால் தான் பின்புற இடுப்பு வலி ஏற்படுகிறது.

 

பாதிப்பு

இந்த தசைப்பிடிப்பு சுருக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. அதாவது குழந்தை கருப்பையில் இருக்கும் நிலை, உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் அமர்ந்து இருக்கும் நிலை இவற்றை பொறுத்து மாறுபடும். சில பெண்கள் பிரசவ காலத்தின் போது இரண்டு மடங்கான பிரசவ வலியை அனுபவிக்கிறாரக்ள். சில பெண்கள் சற்று இறுக்கமும் இடுப்பு வலியும் மட்டும் அனுப விக்கிறார்கள். உங்களுக்கு ஏற்படும் சுருக்கங்கள் வெளிப்படையாக தெரிவதாலும் சற்று வலியுடன் ஏற்படுவதாலும் கவலை கொள்ளாதீர்கள். இதற்காக நீங்கள் எரிச்சல் அடையத் தேவையில்லை. இது உங்கள் பிரசவ காலத்திற்கு உதவும் ஒன்றாகும்.

Related posts

பெண்கள் விரும்பும் குதிகால் செருப்பும்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாழ்வு மனப்பான்மையை போக்க இதை செய்யலாம்…

nathan

கோடை காலத்தில் ஏற்படும் இருமல் பாதிப்பு -இதோ எளிய நிவாரணம்

nathan

அடிக்கடி டர்..புர்-ன்னு விடுறீங்களா? அதை குறைக்க என்ன செய்யலாம் என்பதையும் காணலாம்

nathan

தெரிந்துகொள்வோமா? மார்பக புற்று நோய்க்கான சுய பரிசோதனை எப்படி செய்ய வேண்டும்?

nathan

9 மணிநேர அலுவலக வேலை உங்கள் உயிரை குடிக்கிறதா? அப்ப நீங்க படிக்க வேண்டியது இது!

nathan

உங்களுக்கு தெரியுமா சாப்பிடும்போது புரை ஏறினால் என்ன செய்ய வேண்டும்?

nathan

கைசுத்தம் காப்போம்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…மாங்கல்ய தோஷம் இருக்கும் பெண் வாழ்க்கைத் துணையானால் ஏற்படும் பேராபத்து!

nathan