24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
babywithfever 1600061259
ஆரோக்கியம் குறிப்புகள்

காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?

குழந்தை வளர்ப்பு ஒரு இனிமையான அனுபவம். இருப்பினும், சில கவலைகள் உள்ளன. ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டால், அது பெற்றோருக்கு மிகவும் கடினமான நேரம். பெற்றோர்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தை இயல்பு நிலைக்குத் திரும்பினால்தான் பெற்றோர் உயிர் பெறுகிறார்கள்.

உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய உணவு நோயை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கலாம். உணவு குழந்தைகளுக்கு சக்தி அளிக்கிறது. உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்படுகிறது.

குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் நேரம் தாய்ப்பால் அதிகம் கொடுக்கவும்
குழந்தைக்கு நோய் உண்டாவதற்கான பல அறிகுறிகளில் பசி இழப்பு முக்கியமானதாகும். இந்த சூழ்நிலையில் குழந்தைக்கு பிடித்தமான உணவை கொடுக்க முயற்சிக்க வேண்டும். இந்த உணவு ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது பார்முலா பால் கொடுக்கலாம். குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருப்பதால் குழந்தையின் உடலில் ஆற்றல் அதிகரித்து நோயை எதிர்த்து போராடும் வலிமை உண்டாகிறது.

உங்கள் குழந்தையை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்க அவர்களுக்கு ஒரு சமச்சீரான ஆற்றல் அதிகம் உள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். காய்ச்சல் நேரத்தில் உங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சில உணவுகள் குறித்த பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பருப்பு கிச்சடி

நோயை எதிர்த்து போராட தேவையான வலிமையைத் தர உதவும் ஒரு அடிப்படை உணவு இதுவாகும். பருப்பு கிச்சடியில் புரதம் அதிகம் உள்ளது. இது எளிதில் செரிமானம் ஆகக்கூடியது மற்றும் அதிகமான ஆற்றலைத் தர உதவுகிறது. எந்த ஒரு அதிகமான மசாலா பொருளும் சேர்த்து சுவையான உணவாக தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உணவைத் தயாரிக்க வேண்டாம். எளிய முறையில் செய்தால் போதுமானது. சூடாக இந்த உணவை குழந்தைக்கு கொடுக்கலாம் குழந்தையால் முடிந்த அளவிற்கு இந்த உணவை உட்கொள்ளச் செய்யுங்கள். கட்டாயப்படுத்தி அதிக அளவு உணவு உட்கொள்ள வைக்க வேண்டாம்.

மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு அல்லது பூசணிக்காய்

குழந்தைக்கு 6 மாதம் ஆனது முதல் அவர்கள் உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம். ஆறு 6 மாதம் தொடங்கியது முதல் பல்வேறு திட உணவுகளை கொடுக்கத் தொடங்கலாம். விரிசல் அல்லது கோடுகள் இல்லாத சர்க்கரைவள்ளி கிழங்கை தேர்வு செய்து குழந்தைக்கு வேக வைத்து மசித்து கொடுக்கலாம். வேகவைத்து மசித்த பூசணிக்காய் கொடுப்பதால் நீர்ச்சத்து அதிகரிக்கும்.

சூப்

குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை போதுமான அளவு வழங்குவதற்கு சூப் ஒரு சிறந்த தேர்வு. சூப் செரிமான மண்டலம் எளிதில் செரிக்கக் கூடிய லேசான உணவாகும். சூப் தயாரிப்பது மிகவும் எளிது மற்றும் இதில் உடலுக்குத் தேவையான எல்லா மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் மிக அதிகமாக உள்ளன. வடிகட்டிய தண்ணீர் மற்றும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும். அந்த நீரை மட்டும் வடிகட்டி குழந்தைக்கு கொடுத்தால் போதுமானது. தேவைப்பட்டால் காய்கறிகளை சிறிது சிறிதாக வெட்டி வேகவைத்து இந்த சூப்பில் சேர்த்து கொடுக்கலாம்.

கஞ்சி

ஒரு குக்கரில் உடைத்த கோதுமை அல்லது பருப்பு சேர்த்து கொள்ளவும். கஞ்சி தயாரிக்கும்போது சேர்க்கக் கூடிய பொருளின் அதே அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவைப்பதால் கஞ்சி அடர்த்தியாக இருக்கும். கஞ்சி புரத சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இது குழந்தையின் ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த கஞ்சியில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்ப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காய்கறி மற்றும் பழங்களின் விழுது

காய்ச்சல் நேரத்தில் உட்கொள்ள வேண்டிய இயற்கையான உணவுகளில் முக்கியமானது காய்கறி மற்றும் பழங்களின் விழுது. உங்களுக்கு விருப்பமான காய்கறி அல்லது பழம் கொண்டு ப்யுரீ செய்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆப்பிள், பட்டாணி, கேரட், போன்றவற்றை ப்யுரி வடிவத்தில் குழந்தைக்கு கொடுப்பது காய்ச்சல் நேரத்தில் மிகவும் ஏற்றதாகும்.

தாய்ப்பால் அல்லது பார்முலா பால்

தாய்ப்பால் அல்லது பார்முலா பால் குழந்தைக்கு ஏற்ற உணவாகும். தாய்ப்பால் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது, காய்ச்சல் நேரத்தில் குழந்தை நீர்ச்சத்துடன் இருப்பதை இது உறுதி செய்கிறது என்பதால் தாய்ப்பால் மிகவும் நல்லது. ஆகவே இதனைக் கொடுப்பதில் எந்த தயக்கமும் வேண்டாம். குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மற்றும் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க தாய்ப்பால் குறிப்பாக உதவுகிறது.

6 – 8 மாத குழந்தைக்கு பார்லி நீர்

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து மிக்க தானியங்களில் பார்லியும் ஒன்று. சூப், ஸ்டூ என்று எந்த விதத்திலும் பார்லியை கொடுக்கலாம். பார்லி சூப் அல்லது தானியம் என்று எந்த விதத்திலும் தயாரிக்கப்படலாம் என்பதால் இது குழந்தைக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதும் பார்லியில் உள்ளது.

Related posts

உங்களது டீன் ஏஜ் குழந்தையை பற்றி கவலைப்படுகிறீர்களா? சமாளிக்க தெரியவில்லையா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற உதவும் உணவுகள்!!!

nathan

உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

useful tips.. மருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கற்றாழையின் மருத்துவ பயன்கள் ??

nathan

குழந்தை எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறதா? பிரச்சனைக்கான தீர்வுதான் இது.!

nathan

எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது எனத் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

நம்முடைய பயணம் ஆறாத வலியையும், வடுவையும் தராது இருக்க கட்டாயம் இத படிங்க!….

sangika

மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்

nathan