26 C
Chennai
Wednesday, Nov 13, 2024
P1020517
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு சிக்கன் கிரேவி

தேவையான பொருள்கள்:
சிக்கன் – 1/4 கிலோ
காய்ந்த வத்தல் – 6/7
மிளகு – ஒரு சிறிய தே கரண்டி அளவு
தேங்காய் பூ – 2 தே கரண்டி அளவு
நல்லெண்ணை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 தே கரண்டி
கருவேப்பிலை – 6/7 இலை

செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்…..
ஒரு கடாயில் அடுப்பில் வைத்து நன்கு சூடான பிறகு இரண்டு துளி எண்ணை விட்டு மிளகு, வத்தல், தேங்காய் பூ, ஒன்றின் பின் ஒன்றாக வறுத்து கொள்ள வேண்டும்….
வறுத்தது ஆரிய பிறகு mixieயில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்….. அறைக்கும் போது சிரிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்…..
நறுக்கி வைத்து இருக்கும் சிக்கனில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்…. (இதுவே காரம் சரியாக இருக்கும்… இன்னும் காரம் வேணும் என்றால் வெறும் மிளகாய் பொடி காரத்துக்கு வேணும்ற மாதிரி சேர்த்து கொள்ளலாம்)….
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது சூடான பிறகு தேவையான அளவு எண்ணை ஊற்றி கருவேப்பிலை போட்டு, ஊற வைத்து இருக்கும் சிக்கனை போட்டு நன்றாக கிளறவும்….. பின்பு அடுப்பை குறைத்து வைத்து 15 – 20 நிமிடங்கள் வரை கடாயை மூடி வைக்கவும்…. 20 நிமிடங்கள் கழித்து சிக்கன் நன்றாக வெந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்…… மனக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெடீ….. பரிமாரும் போது மேலே சிறிது கொத்தமல்லி தூவி கொள்ளலாம்………….
பின் குறிப்பு:
இதை சப்பாத்தி, சாதம், பிரியாணி ஆகியவற்றில் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
P1020517

Related posts

ருசியான… செட்டிநாடு சுழியம்

nathan

செட்டிநாடு மட்டன் குழம்பு விரிவான செய்முறை

nathan

செட்டிநாடு மட்டன் குழம்பு

nathan

சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா

nathan

சுவையான செட்டிநாடு வத்த குழம்பு

nathan

தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

nathan

செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு

nathan

செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan