இதயநோய் என்பது முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்ற நிலை இருந்த நிலையில் தற்போது 20களில் உள்ள இளைஞர்கள் பலருக்கும் வருகிறது. இதன் காரணமாக மாரடைப்பு வந்து அதன் காரணமாக உயிரிப்புகளும் ஏற்படுகின்றன. உணவு முறையை சரியாக பாலோ செய்தால் இதயநோய் வரவே வராது.
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகள், குறிப்பாக, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக உண்பது இதய நோய் பாதிப்போடு தொடர்புடையது.
கொழுப்பை விட, கார்போஹைட்ரேட்டுகள் எனப்படும் மாவுச்சத்து இதய ஆரோக்கியத்தில் அதிகமாக தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், குறைவான மாவுச்சத்து உணவு, கார்பஸ் உட்கொள்ளலை குறைப்பது மட்டுமல்லாமல், நீங்கள் உட்கொள்ளும் வழக்கமான அளவை விட அதிக புரதம் மற்றும் அல்லது கொழுப்பும் உங்களுக்குக் கிடைக்கிறது. அதிக எடை, அதிக ட்ரைகிளிசரைடு மற்றும் அதிக இரத்த அழுத்த அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது.
அதே நேரத்தில் உடலில் நல்ல கொழுப்பான (எச்.டி.எல்) அளவை அதிகரிக்க உதவுகிறது. காய்கறிகள், போதுமான நார்ச்சத்து மற்றும் வெண்ணெய், கொட்டைகள், விதைகள், குறைந்த பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள் மற்றும் ஒமேகா -3 நிறைந்த மீன்களிலிருந்து ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
செமி-வெஜிடேரியன்:
செமி-வெஜிடேரியன் (அரை சைவ உணவுமுறை) என்பது ஃப்ளெக்ஸிடேரியன் டயட் என்று அழைக்கப்படுகிறது. இது சைவ உணவுகளை (தாவர உணவுகளை) அடிப்படையாகக் கொண்டது. அவ்வப்போது இறைச்சி, மீன் அல்லது மாமிசத்தை உட்கொள்ளலாம்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த அளவில் உட்கொள்வதை, இந்த உணவுமுறை பரிந்துரைக்கிறது.
lankasri