மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்!!!

இன்றைய உலகமே மாசு படிந்ததாக மாறி வருகிறது. அதனுடன் சேர்ந்து நாமும் மெல்ல சீரழிந்து கொண்டிருக்கிறோம். தினமும் ஒரு நோய் என ஜன தொகையுடன் சேர்ந்து நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் நம் உடல்நலம் வெகுவாக பாதித்துக் கொண்டே வருகிறது. ஒரு 100 வருடங்களுக்கு முன்னே மனிதன் மிக சாதாரணமாக 80 வயதை கடந்து வாழ்ந்து வந்தான். இன்றைய உலகத்தில் எத்தனை பேரால் அது முடிகிறது. எல்லாம் நம் உடல்நலம் தேய்ந்து கொண்டே வரும் காரணங்களினால் தான்.

 

அப்படிப்பட்ட நோய்களில் மிகவும் முக்கியமான ஒரு நோயாக கருதப்படுவது இரத்த அழுத்தம். உயிரையே கூட எடுத்து விடும் நோயாகும் இது. சரி இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் தாக்கங்கள் தான் என்னென்ன? உங்கள் உடலில் உள்ள பல உறுப்புகளை மெல்ல பாதிக்கும். அதன் அறிகுறிகளை காண்பதற்கு முன்பாகவே, சீராக செயல்பட்டு கொண்டிருக்கும் உங்கள் உடலை அது தாக்க தொடங்கி விடும். திடீரென உயிருக்கே ஆபத்தாய் போய் முடியும். அதனால் தான் இரத்த கொதிப்பு அதிகரிக்கும் போது அதனை சிறப்பாக கையாளுவது முக்கியமாகும்.

 

சொல்லப்போனால், வாழ்வு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் இரத்த கொதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதனை கவனிக்காமல் விட்டு விட்டால், நெஞ்சு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடும். சுருங்க சொல்ல வேண்டுமானால், கூடுதல் இரத்த கொதிப்பு உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தாக்கும். உங்கள் நரம்பியல் அமைப்பு பாதிக்கப்படும், உங்கள் சிறிநீரகம் பாதிக்கப்படும், உங்கள் மூளை பாதிக்கப்படும், உங்கள் இதயம் பாதிக்கப்படும், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சரி, கூடுதல் இரத்த கொதிப்பினால் ஏற்படும் தாக்கங்களைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?

இதய தமனிகள்

கூடுதல் இரத்த கொதிப்பு உங்கள் இதய தமனிகளின் உட்பூச்சை தாக்கும். தமனிகள் இறுகும் போது தமனித் தடிப்பு ஏற்படும். உங்கள் தமனிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மூளை, சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற உங்கள் உடலின் சில பாகங்களுக்கு செல்லக்கூடும் இரத்த ஓட்டம் அடைக்கபப்டும். மெதுவாக சில முக்கிய பிரச்சனைகளும் எழும். சிறுநீரக செயலிழப்பு, நெஞ்சு வலி, கண் பாதிப்பு போன்ற பல இதில் அடங்கும்.

இதய செயலிழப்பு

சில நேரங்களில் உங்கள் இதயத்தின் இடது பக்கம் வீக்கமாகும். கூடுதல் இரத்த கொதிப்பு இருந்தால், இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய திணறும். இதனால் உங்கள் இதயம் மெதுவாக செயலிழக்க தொடங்கும்.

அறிவுத்திறன் பிரச்சனைகள்

வயதாவதால் அறிவுத்திறன் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் பாதிப்படைந்த தமனிகளாலும் கூட இது நடக்கலாம். கூடுதல் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உங்கள் தமனிகள் வெகுவாக பாதிக்கப்படும்.

இரத்தத் தமனி விரிவடைதல்

அதிக இரத்த அழுத்தம் இரத்தத் தமனியை விரிவடைய செய்யும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். இரத்தக் கொதிப்பால் வலுவிழந்த தமனிகள் வீங்கும் போது இது ஏற்படும். உட்புற இரத்த கசிவு ஏற்பட்டாலும் இந்த நிலை ஏற்படும்.

கண் பார்வை

தடை செய்யப்பட்ட இரத்த ஓட்டத்தால் கண் பார்வைக்கான நரம்பு பாதிக்கப்படும் போது, இரத்த கசிவு ஏற்படும். இதனால் உங்கள் கண் பார்வை பாதிக்கப்படும். இது மிகவும் ஆபத்தானது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

எலும்புகள்

கூடுதல் இரத்த கொதிப்பால் உங்கள் எலும்பு அமைப்பும் கூட பாதிக்கப்படும். சிறுநீரகத்தின் செயற்பாடுகள் மோசமாக இருக்கும் போது உங்கள் உடலில் இருந்து கால்சியம் நீக்கப்படும். இதனால் எலும்புகளின் நெருக்கம் பாதிப்படையும். உயர் இரத்த கொதிப்பால் உங்கள் எலும்புகள் பாதிப்படைவது இப்படி தான்.

தூக்கத்தில் மூச்சுத் திணறல்

அதிக இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கிறது. அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும். கூடுதல் இரத்த கொதிப்பு இருப்பதால், உங்கள் தூக்கமும் கெட்டுப்போகும்.

கரோனரி – தமனி நோய்

இது கரோனரி என்ற தமனி நோயை ஏற்படுத்தும். இந்த நோய் இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஏற்படலாம்.

இதயத்தின் மீது அழுத்தம்

அதிக இரத்த கொதிப்பால் இதயத்திற்கு அழுத்தம் ஏற்படும் போது, அது தன் திறனை இழக்கும். மெதுவாக இதயம் தேய்ந்து இதனால் உயிருக்கே ஆபத்தாய் விளையும்.

TIA எனப்படும் சிறிய வாதம்

அதிக இரத்த கொதிப்பால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதற்கு எச்சரிக்கை அறிகுறியாக இருப்பது சிறிய வாதமாகும். அப்படியானால் அதற்கு பிறகு மிகப்பெரிய வாதம் ஏற்படலாம். இது உயிருக்கே ஆபத்தாய் முடியும்.

மூளை

மூளைக்கு அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆக்சிஜனும் போய் சேர வேண்டும். இது ஒழுங்காக போய் சேரவில்லை என்றால் என்னவாகும்? உங்கள் மூளை அணுக்கள் செத்துவிடும். அதிக இரத்த அழுத்தத்தால் உங்கள் மூளையில் உள்ள இரத்த குழாய்கள் பாதிக்கப்படும். இரத்த ஓட்டம் தடுக்கப்படும் போது, வாதம் ஏற்படும். அதிக இரத்த கொதிப்பால் மூளையில் ஏற்படும் தாக்கமே இவை.

செக்ஸ் வாழ்க்கை

அதிக இரத்த கொதிப்பு உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கும். தமனிகள் சரியாக செயல்பட முடியாமல் போனால், தனிப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைப்படும். இது ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும். சொல்லப்போனால், பெண்களுக்கும் கூட பெண்ணுறுப்பில் போதிய இரத்த ஓட்டம் இல்லையென்றால் அவர்களின் செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கப்படும்.

மூளை தேய்வு

மூளைத்தேய்வால் உங்கள் யோசிக்கும் திறன், காரண திறன், பார்வை திறன் மற்றும் நடமாடும் திறன்கள் பாதிக்கப்படும். இந்த நிலைக்கு பின்னணியாக பல காரணங்கள் இருந்தாலும் கூட, திறனற்ற தமனிகளும் கூட ஒரு காரணமாக உள்ளது. இரத்த ஓட்டம் சரியாக இல்லாத போது, உடலில் அனைத்தும் சீர்குலைந்து விடும்.

சிறுநீரக செயலிழப்பு

அதிக இரத்த கொதிப்பு இருக்கும் போது சிறுநீரக செயலிழப்பும் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிறுநீரகங்களைச் சுற்றியுள்ள தமனிகள் பாதிக்கப்படும் போது அது உங்கள் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல. உங்கள் சிறுநீரகம் கழிவுகளை வடிகட்டவில்லை என்றால் சிறுநீரகங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அதிக இரத்த கொதிப்பால் சிறுநீரகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

கண்கள்

அதிக இரத்த கொதிப்பால் கண்களுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த குழாய்கள் பாதிக்கப்படும். அப்படி நடந்தால், உங்கள் பார்வை சற்று பாதிக்கப்படும். அதிக இரத்த கொதிப்பால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button