இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் கருடபுராணத்தில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையை கொண்டு வந்து சேர்க்கும் பழக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அழுக்கு ஆடை
பொதுவாக அசுத்தம் இருந்தால் தரித்திரம் தாண்டவமாடும் என முன்னோர்கள் கூறுவதை கேட்டிருக்கக் கூடும். கருட புராணத்திலும், அழுக்கு ஆடைகளை அணிபவர் அன்னை மகாலட்சுமியை மிகவும் கோபப்படுத்துகிறார் என கூறப்படுகிறது. அன்னை லட்சுமிக்கு சுத்தம் மிகவும் பிடிக்கும். அதனாலேயே சுத்தம் பேணப்படும் வீட்டில் வசிக்கவே அவள் விரும்புகிறாள்.
பணத் திமிர்
பண திமிர் இருப்பவர்கள் மற்றவர்களை மதிக்காதவர்களாக இருப்பார்கள். இந்த மனநிலை கொண்டவர்களின் வீட்டில் லட்சுமி வாசம் செய்வதில்லை. எனவே இந்த குணத்தை மாற்றிக் கொள்வது சிறந்தது.
உழைக்காமல் இருப்பவர்கள்
உழைக்காமல் சோம்பேரியாக இருப்பவர்கள் அன்னை மகாலட்சுமி விரும்புவதில்லை. இந்த மனநிலை கொண்டவர்களின் வீட்டில் லட்சுமி வாசம் செய்வதில்லை.
நேரத்தை வீணடிப்பவர்கள்
நேரத்தை வீணாக செலவிடுபவர்கள் மீது தெய்வங்கள் கோபம் கொள்கின்றன. அவர்கள் வாழ்வில் வறுமை வரும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
குறை கூறும் மனநிலை
மற்றவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் நபர்கள் மீது அன்னை லட்சுமி கோபப்படுகிறாள். இது தவிர, தேவையில்லாமல் பிறரை கோபித்துக் கொள்பவர்கள் வாழ்வில் ஏழ்மை வந்து சேரும்.