29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
first baby of th
ஆரோக்கியம் குறிப்புகள்

புரட்டாசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் என்ன?

ஃபிரா தசி மாதம் தெய்வீக இயல்புடைய மாதமாக கருதப்படுகிறது. இது இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு மிகுந்த அறிவையும் செல்வத்தையும் தரும்.

புதன் பகவான் நம் அறிவு நாயகன் கற்பித்தலுக்கும் கேள்வி கேட்பதற்கும் நிற்கிறார். சூரியன் புதனால் ஆளப்படும் கன்னி ராசியை கடக்கும் நாளே புரட்டாசி மாதம்.

இந்த புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் அறிவார்ந்த ஆற்றல், ஞானம் மற்றும் ஆன்மீக தைரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். எந்தப் பாடத்தையும் நன்றாகக் கற்றுக்கொண்டு அதைச் சிறப்பாகச் செய்யக்கூடியவர்கள்.

கல்வியில் சிறந்தவர்கள்:
புதன் அறிவுக்கான கடவுளாக விளங்குவதால், புரட்டாசியில் பிறந்தவர்கள் முடிந்தவரை அனைத்து நூல்களையும் கற்று மிகவும் அறிவாளியாகவும், தத்துவங்கள், விளக்கங்கள் சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்

 

இவர்களிடம் எந்த ஒரு ஒளிவு மறைவு இருக்காது. அதே போல் பொய் சொன்னாலும் பொருந்த சொல்லும் சாமர்த்தியசாலியாக இருப்பர்.

புரட்டாசி மாதம் சூரியனின் கருணையால் அற்புத பலன்களைப் பெற உள்ள ராசிகள்

கற்பூர புத்தி:
இவர்கள் மற்றவரின் மனதை படிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவராக இருப்பார்கள். அதே சமயம் மற்றவர்களால் இவரின் மனதை அறிய முடியாதவர்களாக இருப்பார்கள்.

மற்றவரின் மனதை புண்படுத்த மாட்டார்கள். அதோடு புண்படுவதையும், ஒருவரின் கருத்தையும் கற்பூரம் போல மிக கட்சிதமாக புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.

இவர்களின் வீட்டில் செல்வம் இருக்கோ இல்லையோ, புத்தகங்கள் அதிகமாக வாங்கி குவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே போல் புத்தகத்தை படித்து தேவையானதை மனப்பாடம் செய்யாமல், அதன் உட்கருத்தை புரிந்து கொண்டு தேவையான இடங்களில் விளக்க வல்லவர்கள்.

 

 

குடும்பம்:
இவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்லக்கூடியவர்கள். மற்றவரின் மனதை புண்படுத்த விரும்பாதவர்கள். பெண்களின் மூலம் அதிக ஆதாயத்தை பெறக்கூடியவர்கள். ஏதேனும் முக்கிய விஷயமாக இருந்தால் அதை குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து செய்ய நினைப்பார்கள். பிறரின் விஷயத்தில் மூக்கை நுழைக்க விரும்ப மாட்டர்கள்.

 

தொழில்:
மிக புத்திசாளிகளாக இருப்பதால் இவர்கள் அறிவு சார்ந்த வேலைகளில் இருப்பார்கள். வாழ்வாதாரத்திற்கான தொழில், வியாபாரம் ஆகியவற்றில் தன் அறிவால் சிறப்பான வெற்றியை அடையக் கூடியவர்களாக இருப்பார்கள்.

பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், நூல் பதிப்பு, நிதி, நீதி துறைகளில் கொடிகட்டி பறக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் அறிவுக் கூர்மையால் எந்த தொழிலிலும் சிறப்பாக வருவாய் ஈட்டக்கூடியவர்களாக இருப்பார்கள்.

 

தனம் :
சேமிப்பில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள். அதனால் இவர்களின் கணக்கில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

பூர்வீக சொத்துக்கள், தாய்மாமன் வழி, மனைவி வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

தைரியம் :

இவர்கள் சற்று சுய கெளரவம் பார்க்கக் கூடியவர்களகா இருப்பார்கள். தனக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அவர்கள் குடும்பத்தினரிடம் அவ்வளவாக பகிர்ந்து கொள்ளத மன வலிமை மிக்கவர். மன வலிமை அதிகம் என்பதால் இவர்கள் காவல்த்துறை, ராணுவம், தீயணைப்புத் துறை, வனத்துறை போன்ற துறைகளில் முக்கிய பொறுப்பில் இருக்க வாய்ப்புள்ளது.

 

சிறப்பான குழந்தைகள் :
இவர்கள் தங்களின் குழந்தைகளால் சிறப்பான பாக்கியம் அடையும் வாய்ப்புள்ளவர்கள். குழந்தைகளை சிறப்பாகவும் வளர்ப்பார்கள். குரு, சனி பலமாக இவர்களை பார்ப்பதால் குழந்தைகளால் ஏற்றம் பெறுவர்.

விருப்பமானவை:
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையை மிகவும் விரும்புபவர்களா இருப்பார்கள். நண்பர்களுடன் இயற்கையை ரசித்த அவர்கள், மனைவி வந்த பின்னர் அவருடன் தன் விருப்பமான இயற்கையை ரசிக்க அதிகம் விரும்புவார்கள்.

Related posts

நேத்து அடிச்ச சரக்கோட போதை இன்னும் குறையலையா? அப்ப இதெல்லா சாப்பிடுங்க!!!

nathan

நகத்தில் மாற்றமா? நல்லது அல்ல!

nathan

உங்க பணப் – பெட்டியில் இந்த பொருட்களை வெள்ளி கிழமையில் வைத்தால் செல்-வம் பெருகுமாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

கொழுப்பை குறைக்க தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா வீறிட்டு அழுது கொண்டே குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு சீக்கிரமா வயசாகாம இருக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே தொரிந்துகொள்ளுங்கள்….எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கணும் தெரியுமா?

nathan

பெண்கள் மூக்கு/காது குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..?

nathan

பெண்களே இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா?

nathan