தேவையானவை
க்ரீன் டீ -1
ஆப்பிள் -1
இஞ்சி – 1
ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு – – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
1 க்ரீன் டீ பாக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை 200ml சுடுதண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். டீ தூள் அந்த தண்ணீரில் நன்றாக ஊறி, தண்ணீரும் நன்றாக ஆறிவிடும். இந்த கிரீன் டீ வாட்டர் அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பின் சொல்லக்கூடிய எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டுக் கொள்ள வேண்டும். மீடியம் சைஸில் இருக்கும் 1 – ஆப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டுக்கொள்ளுங்கள்.
இஞ்சி – 1 இன்ச் அளவு தோல் சீவியது, ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 3 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு விட்டு, இறுதியாக முதலில் நாம் கப்பில் தயார் செய்து வைத்து இருக்கிறோம் அல்லவா கிரீன் டீ தண்ணீர், அது சூடு நன்றாக ஆறி இருக்கும்.
க்ரீன் டீ பாக்கெட்டை எடுத்து தூர போட்டுவிட்டு, அந்த தண்ணீரை மட்டும் மிக்ஸி ஜாரில் ஊற்றி மிக்ஸியை ஓட விடுங்கள். விழுது போல எல்லா பொருட்களும் சேர்ந்து அரைபட்டு வெயிட் லாஸ் ஜூஸ் நமக்கு கிடைத்திருக்கும். இதை வடிகட்ட கூடாது. அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றி குடித்துவிட வேண்டும்.
குறிப்பு
காலையில் ஒருமுறை பிரஷ்ஷாக தயார் செய்து குடிக்க வேண்டும். இரவு ஒரு முறை பிரஷ்ஷாக தயார் செய்து குடிக்க வேண்டும்.
இரவு தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு, முன்பு 1 டம்ளர் குடித்து கொள்ளுங்கள். காலை உணவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து இந்த ஜூஸை குடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.