1 1545127831
ஆரோக்கியம் குறிப்புகள்

6 மாதக் குழந்தைக்குத் தாய்ப்பாலுடன் வேறு என்ன நிரப்பு உணவுகள் கொடுக்கலாம்?

இணை உணவுகள்
ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது. ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுகள் தான் இணை உணவுகள் எணப்படும். இவைகள் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டதாக இருக்கின்ற பொழுது, குழந்தை எளிதில் பழகிவிடும்.

ஏனெனில் கர்ப்ப காலத்தில் தாய் உண்ட உணவும் பின் தாய்ப்பால் மூலமாக நேரடியாகவும் வீட்டு உணவின் ருசி மூளையில் பதிவாகி, இருப்பதால் இது சுலபமாகும்.

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். அதேபோல் இணை உணவு ஆரம்பிப்பதை ஆறு மாதத்திற்குப் பின் தள்ளிப்போடவும் கூடாது. நம்முடைய முன்னோர்கள் அன்னம் குழந்தைக்கு ஊட்டுவதை ஆறு மாதத்துக்குப் பின்பும் அதை ஒரு சம்பிரதாயமாகவே வைத்திருந்தனர்.

வீட்டு உணவுகள்

பொதுவாக குழந்தைகளுக்கு டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பூப்போன்ற வளரும் குழந்தைகளுக்கு அவ்வப்போது வீட்டுப் பக்குவத்தில் கொஞ்சம் குழைவாக ரசாயனங்கள் கலக்காத பொருள்கள் சேர்த்து ஆரோக்கியமாக சமைப்பது நல்லது.

ரெடிமேட் உணவுகள்

அடைத்து விற்கப்படுகின்ற உணவுகளில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் இனிப்பும் ரேசாயனப் பொருள்களும் நறுமணமும் கலந்து இருக்கும். உணவு பழகுகின்ற பருவமான ஆறு மாதத்திலிருந்து 10 மாதங்கள் வரை எந்த உணவினை கொடுக்கிறோமோ அதனுடைய ருசிக்கு ஏற்றபடி மாறிவிடுகிறது.

எப்படி கொடுக்கலாம்?

முதலில் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தரவும். ஆறு மாதங்களுக்குப் பிறகு அரிசிக்குக் கஞ்சி மற்றும் பருப்புக் கஞ்சி, காய்கறி, கீரை வேகவைத்த தண்ணீர் (சூப்), முளைகட்டிய பயறுகளை வறுத்து அரைத்து வீட்டிலேயே அரைத்த சிறுதானியங்களில் செய்த கஞ்சியைக் கொடுப்பது, நல்லெண்ணெயை அல்லது நெய்யோ சேர்த்துக் கொள்ளலாம். இதுபோன்ற மென்மையான உணவுகளை 6 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது.

 

6 மாதம் முதல் 12 வரை

இட்லி, தோசை, காரம் சேர்க்கப்படாத சாம்பார், உப்பு மட்டும் சேர்க்கப்பட்ட பருப்பு, காய்கறிகள் மசித்தது போன்ற உணவுகள் கொடுகு்கலாம்.

அரிசி சாதம், பருப்பு, நெய், ராகி கூழ், வாழைப்பழம், பொங்கல் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

ஆனால் 12 மாதங்கள் வரையிலும் குழந்தை சாப்பிட ஆரம்பித்துவிட்டதும் தாய்ப்பாலை நிறுத்திவிட வேண்டாம். தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

Related posts

ஒன்று முதல் 9-ம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்… தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சாப்பிட்ட உடனே தேநீர் அருந்தினால் என்ன நடக்கும்..?!

nathan

இளமையாகத் தோன்ற ஆசையா?

nathan

தனிப்பட்ட நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..

nathan

உங்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..

nathan

பெண்களுக்கான சில ஆலோசனைகள்..! சீக்கிரமாக கர்ப்பமடைவது எப்படி?

nathan

குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றி எந்தெந்த விஷயங்களை எல்லாம் நீங்க சொல்லி தரணும்னு தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாழ்வு மனப்பான்மையை போக்க இதை செய்யலாம்…

nathan

அதிகம் சாப்பிட்டால் ஆபத்து… உஷார் நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

nathan