28.7 C
Chennai
Saturday, May 25, 2024
diet fail
எடை குறைய

உடல் எடையை குறைக்க தினமும் சாப்பிட வேண்டிய சில இந்திய உணவுகள்!!!

உடல் எடையை குறைக்க வேண்டுமென்று டயட்டை பின்பற்ற பல இந்தியர்களும் நினைக்கின்றனர். உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு சந்தையில் பல விதமான உடல் எடை குறைப்பு பொருட்கள் கிடைக்கவே செய்கிறது. ஆனால் கலோரிகளை வேகமாகவும் சிறந்த முறையிலும் குறைக்க வேண்டுமானால் கண்டிப்பான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

இந்திய உணவுகளில் மசாலாக்களும் எண்ணெயும் வளமையாக உள்ளதால் அதனைப் பற்றி பலரும் தவறான அபிப்ராயத்தை கொண்டுள்ளனர். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுகளைப் போல் தெரிந்தாலும் கூட, உங்கள் உடல் எடையை குறைக்கும் பொருட்கள் அந்த உணவுகளில் உள்ளது என்பது தான் உண்மை.

மீன், முழு தானியங்கள் மற்றும் பயறு போன்ற உணவுகள் இந்திய உணவுகளில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உணவுகளை தினசரி முறையில் உட்கொண்டு வந்தால், தோராயமாக 500 கலோரிகளை உட்கொள்கிறீர்கள். நாள் முழுவதும் வேலை செய்வதற்கு உடலுக்கு இது போதுமானதாகும்.

நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், தினமும் 1200 கலோரிகள் உட்கொண்டு, ஜிம்மில் 1000 கலோரிகளை எரிக்க வேண்டியிருக்கும். உடல் எடையை குறைக்க இந்திய டயட்டை தேர்ந்தெடுத்தால், அடுத்த சில மாதங்களில் கண்டிப்பாக பல மாற்றங்களை காண்பீர்கள்.

உங்கள் உடல் எடையை குறைக்க தினமும் உண்ணக் கூடிய சில இந்திய உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா…?

கைக்குத்தல் அரிசி

உடல் எடையை குறைக்க வேண்டுமானால் அரிசியை முழுமையாக தவிர்க்க கூடாது. தினமும் கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை ஒரு கப் அளவாவது உட்கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசி சாதத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. வெள்ளை சாதத்தை காட்டிலும் இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது.

காய்கறிகள்

உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த இந்திய உணவுகளில் ஒன்று தான் காய்கறிகள். ஆனால் உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய்களில் அதிக அளவிலான கலோரிகள் உள்ளதால் அவைகளை தவிர்க்கவும்.

பயறுகள்

இவ்வகை உணவுகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள ட்ரை கிளைசரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவும். இந்த உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளதால், உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் உதவும்.

முழு தானியங்கள்

வளமையான நார்ச்சத்து மற்றும் குறைவான கொழுப்பை கொண்டதாகும் முழு தானியங்கள். அதனால் கொழுப்பை நீக்க வேண்டுமானால், உங்கள் தினசரி உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தேவைப்படும் புரதம், கனிமங்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் இதில் உள்ளது.

குளிர்ச்சியான உணவுகள்

உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய். வயிற்றின் உட்பூச்சிற்கு இது குளிர்ச்சியை அளிக்கும். இதில் நீர்ச்சத்து உள்ளதால் உங்கள் வயிற்றையும் நிரப்பும். உடல் எடை குறைப்பிற்கான சிறந்த காய்கறி இதுவாகும்.

மசாலா சேர்க்கப்பட்ட உணவுகள்

இந்திய உணவுகளில் மசாலா என்பது அத்தியாவசியமாகும். உடல் எடையை நீங்கள் குறைக்க வேண்டுமானால் இலவங்கப்பட்டை, கிராம்பு, சீரகம், இஞ்சி, கடுகு, மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றை பல விதமான உணவு தயாரிப்புகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மீன்

உடல் எடையை குறைக்க உதவும் இந்திய உணவுகளில் மீன் கண்டிப்பாக முக்கிய பங்கை வகிக்கிறது. மீனில் புரதமும் ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அதிகமாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது உதவிடும்.

நட்ஸ் மற்றும் விதைகள்

உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் தான் நட்ஸ் மற்றும் விதைகள். கொழுப்பை நீக்க வேண்டுமானால் கடலை பருப்பையும், பாதாம்களையும் கை நிறைய உண்ணுங்கள். பூசணி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற சில விதைகள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை மேம்படுத்தும்.

பூண்டு

உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு உதவிடும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து செயலாக்கவும் இது உதவிடும். உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமானால், உங்கள் உணவுகளில் பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ் என்பது அமெரிக்க உணவு என பலரும் தவறாக நினைத்துள்ளனர். ஆனால் அது இந்திய உணவு வகையாகும். ஆரோக்கியமான இந்த உணவில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், அது உங்கள் வயிற்றை சுலபமாக நிரப்பிவிடும். உங்களுக்கு ஆற்றல் திறனையும் இது வழங்கிடும். இதனால் ஜிம்மில் இருக்கும் போது அதிக கலோரிகளை குறைக்க உதவும்.

ராகி மால்ட்

தென்னிந்திய மக்கள் பலராலும் பருகப்படுவது தான் ராகி மால்ட் என்ற பொதுவான எனர்ஜி பானம். உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமானால், தினமும் காலையில் ஒரு டம்ளர் ராகி மால்ட்டை இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து குடியுங்கள்.

ஜூஸ்

உடல் எடையை இயற்கையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் குறைக்க வேண்டுமானால், 3 வார காலத்திற்கு ஜூஸ் டயட்டை பின்பற்றுங்கள். உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக விளங்குவது கீரை, உப்பு மற்றும் ஒரு கப் தயிர் கொண்டு செய்யப்படும் பச்சை ஜூஸ்.
diet fail

Related posts

வெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா..? இதை முயன்று பாருங்கள்

nathan

ஊளைச் சதையை குறைக்கும் இயற்கை பானங்கள்

nathan

உடல் எடையை இப்படி கூட குறைக்க புதுவிதமான உருளைக் கிழங்கு வைத்தியம்!!

nathan

டை இழப்பதற்கான‌ டாப் 5 காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்

nathan

இயற்கை முறையில் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்

nathan

செலவே இல்லாமல் அதிகரித்த எடையை குறைக்க….

sangika

அதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம் என்பது தெரியுமா ?அப்ப இத படிங்க!

nathan

நீங்கள் க்ரீன் டீ குடிச்சு உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா ? படிக்கத் தவறாதீர்கள்…

nathan