28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
red meat 002
ஆரோக்கியம் குறிப்புகள்

சிவப்பு நிற இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

சிகப்பு நிற இறைச்சியை அதிகம் உண்பதால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக அனைத்திலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவரும் கால்நடை வைத்தியருமான பீ்.எஸ்.கீர்த்திகுமார தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அந்த நிறுவனம் தினசரி பாவணைக்காக 70 கிராமிற்கு அதிகமாக மாட்டிறைச்சி உள்ளிட்ட சிகப்பு நிற இறைச்சி வகைகைளை பொதுமக்கள் உண்பதனை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் தாக்கத்திலிருந்து விடுபடலாம் என தெரிவித்துள்ளது.

அத்துடன், இறைச்சி வகை மட்டுமல்லாது இறைச்சியை பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து உணவுகளையும் அதிகமாக உண்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் அண்மைக்காலமாக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனை குறைப்பதற்காக மாட்டிறைச்சி உண்பதை மக்கள் முற்றாக தவிர்த்து விடுமாறும் அவர் மேலும் வலியறுத்தியுள்ளார்.
red meat 002

Related posts

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை போக்கி நன்மைகள் நடைபெற ! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடம்பில் உள்ள நச்சுக்கள், கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இந்த 7 அற்புத டீயை எடுத்துகோங்க போதும்

nathan

உங்களுக்கு தெரியுமா நமது ஆரோக்கியம் நம் நாக்கில்… உங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும்..!!

nathan

கொத்தமல்லி இலையை தினமும் உணவில் சேர்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் தற்கொலை உணர்வை தூண்டும் இந்த விஷயத்தை சாதாரணமா எடுத்துக்காதீங்க!

nathan

மாமியார் மருமகள் பிரச்சனைகளுக்கு தீர்வு!….

nathan

உங்களுக்கு நீர் உடம்பா? குறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள்!

nathan

மாதுளை இலையில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளதா?

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! சமையல் டிப்ஸ்!

nathan