27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
17 1410935700 15 weight
எடை குறைய

நம் உடல் எடையை வேகமாக குறைக்க இதோ சில டிப்ஸ்

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். பொதுவாக நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க முயலும் போது, அதன் பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதற்கு சற்று பொறுமைக் காக்க வேண்டும்

இங்கு உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், உடல் எடை கணிசமாக குறைவதை நீங்களே காணலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

பூண்டு பால்

4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.

புடலங்காய்

புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் புடலங்காய் பொரியல் செய்து, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

கேரட் மற்றும் மோர்

தினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடித்து வர, உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

பப்பாளிக் காய்

பப்பாளிக் காயை பருப்புடன் சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, அதுவும் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

சூப்

உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், 2-3 மாதங்களுக்கு தினமும் இரவில் காய்கறி சூப் செய்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வது கட்டுப்படுத்தப்படும்.

கொள்ளு

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று கொள்ளு. அத்தகைய கொள்ளுவை 1-2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, 1 டம்ளர் நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைதது, மறுநாள் காலையில் அந்த நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வர, உங்கள் உடல் எடை குறைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

கறிவேப்பிலை

3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்ல் 10-12 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர, நீங்கள் எதிர்பாராத அளவில் உங்களின் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

இஞ்சி சாறு

உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். எனவே இஞ்சி சாற்றினை அன்றாடம் ஒரு டம்ளர் பருகி வர உடல் எடை குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முட்டைக்கோஸ்

எடையைக் குறைக்க நினைத்தால், முட்டைக்கோஸை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். அதற்கு அந்த முட்டைக்கோஸை சாலட்டாகவோ அல்லது வேறுவிதமாக சமைத்தோ சாப்பிடலாம்.

எலுமிச்சை மற்றும் தேன்

இது அனைவருக்கும் தெரிந்த ஓர் வழி தான். அது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
17 1410935700 15 weight

Related posts

தினம் இதை சாப்பிடுங்கள் எடை கண்டிப்பா குறையுமாம்!!சூப்பர் டிப்ஸ்…

nathan

* எடை கூட காரணங்கள்: *

nathan

நலம் பயக்கும் நனி சைவம்! (வீகன் டயட்)

nathan

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா?

nathan

எடை குறைப்புக்கு இந்தப்பழதை சாப்பிடுங்கள்!…

sangika

எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

இதோ எளிய நிவாரணம்! உடல் எடை குறைக்கும் அற்புத உணவுகள்! தினமும் சாப்பிட்டு பாருங்க…

nathan

இந்த ஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் !

nathan

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க.

nathan