sonali
அழகு குறிப்புகள்

16 வயதில் தனியாக நிற்கும் நடிகையின் மகள்!

நடிகை சோனாலி போகாட்டின் ஒரே மகள் அப்பா, அம்மா இல்லாமல் தனியாகிவிட்டதை பார்த்து ரசிகர்கள் பாவப்படுகிறார்கள்.

சோனாலி போகாட்டின் மகள் யசோதரா தன் 16 வயதில் பெற்றோர் இல்லாமல் தனியாகிவிட்டார்.

சோனாலி போகாட்

நடிகையும், பாஜக நிர்வாகியுமான சோனாலி போகாட் கோவாவுக்கு சென்ற இடத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி மரணம் அடைந்தார். முதலில் மாரடைப்பு என்றார்கள். இந்நிலையில் இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அனைவரின் கவனமும் சோனாலியின் மகள் பக்கம் திரும்பியிருக்கிறது.

யசோதரா

சோனாலிக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரின் பெயர் யசோதரா போகாட். 16 வயதாகும் யசோதரா விடுதியில் தங்கி படித்து வருகிறார். தாயை இழந்து வாடும் யசோதராவை நினைத்தால் பாவமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் யசோதராவின் நிலை யாருக்கும் வரக் கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

அப்பா

சோனாலியின் கணவர் சஞ்சய் போகாட் 2016ம் ஆண்டு உயிரிழந்தார். அவர்களின் பண்ணை வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். 10 வயதில் தந்தையை இழந்த யசோதரா, தற்போது 16 வயதில் தாயையும் இழந்துவிட்டு யாரும் இல்லாமல் நிற்கிறார்.

நடிப்பு

சோனாலி தன் மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வந்தார். தன்னை போன்றே மகளுக்கும் அரசியலில் ஈடுபாடு இருப்பதாக தெரிவித்தார். மேலும் நடிகையாகும் ஆசையும் யசோதராவுக்கு இருப்பதாக சோனாலி முன்பு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam

Related posts

சூப்பர் டிப்ஸ்! தொப்பை போடுவதை தடுக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்…!!

nathan

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

sangika

கண்டிப்பா இத பண்ணுங்க.! சருமம் அதிகமா வியர்க்குதா?

nathan

சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்த சூப்பர் டிப்ஸ்…

nathan

சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்க இதோ சில வழிகள்! ….

sangika

ஆலிவ் எண்ணெய் தோல் மாய்ஸ்சுரைசர் செய்ய 4 எளிய வழிகள்,beauty tips at tamil

nathan

இரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம்

nathan

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

இந்தியாவில் கணவன் குறித்த உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவி!

nathan