28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
zxcvbhgf
ஆரோக்கிய உணவு

புளிச்சகீரையின் மருத்துவ குணங்கள்

புளிச்சகீரையானது பெயருக்கு தகுந்தாற்போல் மிக அதிக புளிப்பு சுவையுடையது.

ஆந்திராவில் இந்த கீரையின் பயன்பாடு மிகவும் அதிகம்.

ஆந்திராவில் இந்த கீரையை ‘கோங்குரா என அழைக்கிறார்கள். புளிச்சகீரைக்கு புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் உண்டு.

புளிச்சகீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன.

 

அதனால் தான் நம் முன்னோர்கள் இந்தக் கீரையை வாரம் இருமுறையாவது சமைத்து உடல் வலிமை குன்றிய குழந்தைகளுக்கு சாப்பிடத் தருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.

பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

இது பித்ததை அதிகப்படுத்தும் குணமுடையது.

புளிச்சக்கீரை உடல் சூட்டைக் தனித்து உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
தோல் தொடர்பான ஒவ்வாமை நோய்களுக்கும் சிறந்த நிவாரணமாக புளிச்ச கீரை விளங்குகிறது.
புளிச்சக்கீரையின் கனியில் இருந்து வரும் சாற்றை சர்க்கரை மற்றும் மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமாகிறது.
புளிச்ச கீரையின் விதைகள் பால் உணர்வுகளை தூண்டிவிடுகிறது.
புளிச்ச கீரையினை உடல் வலியைப் போக்க மேல் பூச்சாக பயண்படுத்தலாம்.
நீர் கோர்த்தல் பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, புளிச்சகீரையை மசியல் செய்து சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
புளிச்சகீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
புளிச்சகீரையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது.
புளிச்சகீரையானது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
புளிச்சகீரையானது உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.
பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்சனை நீங்கும்.
மந்தம், இருமல், காய்ச்சல், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை ஒரு மிக சிறந்த தீர்வாகும்.
சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

Related posts

இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ் கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பையை குறைக்க உதவும் 15 உணவுகள்

nathan

ஆரோக்கியமான தின்பண்டங்களுக்கான யோசனைகள்

nathan

சூப்பரான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

nathan

அற்புத மருத்துவகுணம் நிறைந்த ஆடாதோடை…! சூப்பர் டிப்ஸ்

nathan

ஏன் தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் உங்கள குடிக்க சொல்லுறாங்க தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

பால் அல்லது தயிர் – இவற்றில் எது ஆரோக்கியமானது?

nathan

உங்களுக்கு தெரியுமா மரணத்தில் இருந்து காக்கும் தோங்காய் பூ!

nathan