28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ulcer stomach
ஆரோக்கிய உணவு

அல்சர் புண்கள் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள்!

அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்கள் மிகுந்த வலியை ஏற்படுத்தும். வயிற்றுப் புண்கள் பெப்டிக் அல்சர் என்றும், சிறுகுடல் புண்கள் டூடெனனல் அல்சர் என்றும் அழைக்கப்படுகின்றன. வயிற்றில் உள்ள சளியின் அடர்த்தியான அடுக்கு மெலிவதால் வயிறு மற்றும் சிறுகுடலில் உருவாக்கம் ஏற்படுகிறது. இருப்பினும், சளி அடுக்கு ஏற்கனவே மெல்லியதாக இருப்பதால், சரியான நேரத்தில் உணவை உண்ணவில்லை என்றால், செரிமான அமிலங்கள் வயிற்றின் திசுக்களை அரித்து, புண்களை ஏற்படுத்தும்.

ஹெலிகோபாக்டர் பைலோரி (H.pylori) எனப்படும் பாக்டீரியா தொற்று வயிற்றுப் புண்களுக்கு முதன்மைக் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உங்களுக்கு அல்சர் இருந்தால், மருந்து உட்கொள்வதைத் தவிர, சில உணவுகளை சாப்பிடுவது அல்சர் வேகமாக குணமடைய உதவும். பழங்களை சாப்பிடுவது இன்னும் சிறந்தது. அல்சர் வேகமாக குணமாக என்னென்ன பழங்களை சாப்பிட வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி வயிற்றுப் புண்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, இது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக ஆப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் ஆப்பிளில் ஆப்பிளில் எச்.பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கும் ஃபிளாவோனாய்டுகள் உள்ளன. ஆகவே அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும் மற்றும் அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும்.

மாதுளை

வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை செரிமான பிரச்சனைகளால் ஏற்படுகிறது. மாதுளையின் தோலில் உள்ள புனிகலஜின்ஸ் வயிற்றுப் பிரச்சனைகளுக்கான சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மாதுளை ஜூஸை குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும். அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் மஞ்சள் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம்.

முலாம் பழம்

முலாம் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்சனைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும் முலாம் பழம் உடலின் pH அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இதில் 90% நீர் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளதால், இது நெஞ்செரிச்சல் பிரச்சனைகளையும் தடுக்கிறது.

பலாப்பழம்

பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சனைகள சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. அதோடு இது ஆராக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் இரைப்பை நோய்க்குறி மற்றும் ஹைப்பர் குளாரிஹைட்ரியாக்கு நிவாரணம் அளிக்கிறது மற்றும் இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் ஹைப்பர் அசிடிட்டி, அல்சர் மற்றும் பிற இரத்தம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்துகிறது. இதற்கு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். மேலும் நெல்லிக்காய் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் பிற குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கிறது.

Related posts

மணம் தரும்… நோயை விரட்டும் சீரகம்!

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சாப்பிட்ட உணவு ஜீரணமாகவில்லையா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

kudampuli benefits in tamil – குடம்புளி (Garcinia Cambogia

nathan

கொழுப்பை கரைக்கும் வாழை தண்டு தயிர் பச்சடி

nathan

கொய்யாவில் மருத்துவப் பொருட்கள் அடங்கியுள்ளது !!

nathan

அத்திப்பழம் சாப்பிட்டா ஆண்மை அதிகரிக்குமா?எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

அம்மை நோய் தீர்க்கும்… காளான்

nathan