முகப் பராமரிப்பு

வறண்ட சருமம் உள்ளவங்க இதோ அற்புதமான எளிய தீர்வு

பேஸ் பேக்குகள் தயாரிப்பதில் பூக்கள் காட்டாயம் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் மல்லிகை பூ கொண்டு பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று காண்போம்.

பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், பிளவனோய்ட்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இவற்றை முகத்தில் தடவினால் முகம் இளமையாக மாறுவதோடு, மினுமினுப்பாகவும் பொலிவு தரும்.

நம் வீட்டில் சாதாரணமாக வளர்க்கும் பூக்களிலேயே அழகு சார்ந்த பயன்கள் அதிகம் இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மல்லிகை மலர்களின் இதழ்கள் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. இது சருமத்திற்கு ஒரு நல்ல சுத்தப்படுத்தியாகவும், சருமத்தை பிரகாசமாக ஒளிர வைக்கவும் அனுமதிக்கிறது. மல்லிகை மலர் இதழ்களின் ஃபேஸ் பேக்கை தயாரிக்க, ஒரு சில இதழ்களை எடுத்து சிறிய உரலை பயன்படுத்தி அந்த இதழ்களை கசக்கி பிசைந்து கொள்ளுங்கள்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதனுடன் ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பால் மற்றும் கடலை மாவு சேர்த்து உங்கள் முகத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை கழுவினால், உங்களுக்கு தேவையான பளபளப்பைப் பெறுவீர்கள்.

தேவையான பொருட்கள் :

மல்லிகைப்பூ இதழ்கள் – கால் கப்
கெட்டித் தயிர் – கால் கப்

இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவவும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேஸ் பேக் சிறந்தது.- source: maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button