நட்சத்திர சோம்பு எடுத்து மெல்லுங்கள். அமிலத்தன்மை அறிகுறிகளைக் குறைக்கிறது. நட்சத்திர சோம்பு நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்தால் அசிடிட்டி பிரச்சனை நீங்கும்.
புதினா இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.
செரிமான பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்த சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. நெஞ்செரிச்சல் குணமாக, 1 ஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
இஞ்சியை வெந்நீரில் இடித்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். நெஞ்செரிச்சல் ஏற்படும் போது நெல்லிக்காய் சாறு அருந்தலாம்.
இரண்டு ஏலக்காயை தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து தண்ணீர் குடித்தால் நெஞ்செரிச்சல் உடனே குணமாகும்.
துளசி ஒரு மருத்துவ மூலிகை. 6 துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் விரைவில் நீங்கும்.