28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
10 ginger hone
ஆரோக்கியம் குறிப்புகள்

சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில கை வைத்தியங்கள்!

ஜலதோஷத்தால் பலர் இருமல், சளி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அடிக்கடி ஏற்படும் இருமல், சளி பிரச்சனைகளை மருத்துவமனைக்குச் செல்வதை விட வீட்டிலேயே தீர்வு காண்பது நல்லது. நம் முன்னோர்கள் முன்பு சளி, இருமல் போன்றவற்றுக்கு மருத்துவமனைக்குச் சென்றார்களா? கைமுறை சுய திருத்தம்.

சொல்லப்போனால், தற்போதைய நவீன காலத்தில் கூட சிறு உடல்நல பிரச்சனைகளுக்கு எடுத்தவுடனேயே மருத்துவமனைக்கு செல்லாமல், ஒருசில கை வைத்தியங்களைப் பின்பற்றி, குணமாகாத பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

 

நம் வீட்டு சமையலறையிலேயே மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொன்றும் உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. எனவே இப்போது நாம் சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்களைக் காண்போம் வாருங்கள்.

வைத்தியம் #1

நன்கு பழுத்த கொய்யாப்பழத்தை துண்டுகளாக்கி, மிளகுத் தூள் தொட்டு சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும் போது, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வைத்தியம் #2

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அத்தகைய அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதை சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து தினமும் குடித்து வர, சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, உடல் சோர்வும் நீங்கும்.

வைத்தியம் #3

கற்பூரவள்ளி இலை சளி, இருமல் பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கக்கூடியது. அதற்கு கற்பூரவள்ளி இலை துண்டுகளாக்கி நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரைக் நாள் முழுவதும் அவ்வப்போது குடித்து வர, சீக்கிரம் சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

வைத்தியம் #4

வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிடுவதனால், இருமல் மற்றும் சளி தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதிலும் சின்ன வெங்காயத்தை தான் சுட்டு சாப்பிட வேண்டும். ஏனெனில் அது தான் சளி, இருமல் பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும்.

வைத்தியம் #5

வெற்றிலை அற்புதமான மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு மூலிகை இலை. இந்த வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றில் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், இருமல் பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியம் #6

வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழமாக ஆரஞ்சு பழம், சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட உதவும். பலரும் ஆரஞ்சு சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆரஞ்சு பழம் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தக்கூடியது. அத்தகைய ஆரஞ்சு பழத்தை ஜூஸ் எடுத்து, அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடிப்பதால், சளி, இருமல் பிரச்சனை குணமாவதோடு, தொண்டை வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியம் #7

சளி, இருமலால் அவஸ்தைப்படும் போது, நம் முன்னோர்கள் மற்றும் கிராம பகுதிகளில் மேற்கொள்ளும் ஒரு வைத்தியம் தான் இது. அது என்னவெனில் மாட்டுப்பாலை நன்கு காய்ச்சி, அதில் சிறிது தேன் கலந்து குடிப்பார்கள். இதனால் சளி, இருமல் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட உதவும்.

வைத்தியம் #8

ஒம விதைகளை நீரில் போட்டு, அத்துடன் சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடித்து வந்தால், இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக இந்த வைத்தியம் நெஞ்சு சளியை வெளியேற்ற உதவியாக இருக்கும்.

வைத்தியம் #9

மஞ்சளில் சளி, இருமலுக்கு காரணமான வைரஸ் தொற்றுக்களை சரிசெய்வதற்கான ஆன்டி-செப்டிக், ஆன்டி-வைரல் பண்புகள் அதிகம் உள்ளன. சளி, இருமல் பிடித்திருக்கும் போது, வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் போது குடித்தால், இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகல் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியம் #10

இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து சாப்பிடுவதன் மூலம், நெஞ்சு பகுதியில் உள்ள சளி முற்றிலும் வெளியேறி, விரைவில் இருமல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

Related posts

வயிற்று பிரச்சினைகள் தீர சூடான தண்ணீர்!…

nathan

ஜப்பானியர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ரகசியம் என்னவென்று தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கழிவறையிலும், குளியலறையிலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

nathan

நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

30 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தினமும் கக்கா போக கஷ்டப்படுறீங்களா? ஒரு ஸ்பூன் சேர்த்து குடிங்க…

nathan

இத படிங்க உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்..! எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்கிறீர்களா.?!

nathan

இரவு வேளையில் அசைவ உணவுகளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?தெரிந்துகொள்வோமா?

nathan