The beauty secret of short hair SECVPF
தலைமுடி சிகிச்சை

உங்கள் சருமம் மற்றும் முடியை இயற்கையாக பாதுகாப்பது எப்படி!

மாதம் ஒருமுறை, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் போன்றவை வராமல் இருக்கும். வெயில், மாசு போன்றவற்றால் சருமம் பெரிதும் பாதிப்படைகிறது. அதற்காக வெளியில் செல்வதை நாம் தவிர்க்க முடியாது. சில பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் சரும ஆரோக்கியத்தை அதிகரித்து அழகை மேம்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே…

இறந்த செல்களை நீக்குதல்:

மாதம் ஒருமுறை, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் போன்றவை வராமல் இருக்கும். வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு இறந்த செல்களை நீக்கலாம்.

சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சரும வறட்சியை நீக்கும். சீத்தாப்பழத் தோலை முகத்தில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு நீரைக்கொண்டு முகம் கழுவுங்கள். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் இறந்த செல்கள் நீங்கும். சீத்தாப் பழச்சாற்றை வாரம் 3 நாட்கள் பருகி வந்தால் சரும பிரச்சினைகள் ஏற்படாது.

கூந்தல் அழகிற்கு:

தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தும்போது ‘கண்டிஷனிங்’ செய்வது முக்கியமானது. குறிப்பாக ‘முடி பிளவு’ உடையவர்கள் கண்டிஷனிங் செய்துவந்தால் அந்தப் பிரச்சினை நீங்கும். வறண்ட கூந்தல் உடையவர்கள் ‘கிரீம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

சுருட்டை முடி கொண்டவர்கள் ‘ஜெல்’ வகை கண்டிஷனரை தேர்வு செய்யலாம். நேரான முடி கொண்டவர்கள் ‘கிரீம்’ அல்லது ‘போம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். இயற்கையான முறையில், சாதம் வடித்த கஞ்சி, மருதாணி, செம்பருத்தி போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

நகங்கள் பராமரிப்பு:

நகங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் தொற்று ஏற்படாது. வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு, எலுமிச்சம் பழச்சாறு போன்றவை கலந்து, அதில் கைவிரல் நகங்களை சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.

வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்டக்கொழுப்பு கரையும். சருமம் பொலிவாகும். ரசாயனப்பொருட்கள் நிறைந்த கிரீம்கள், முகப் பூச்சுகளை அதிகம் பயன்படுத்தினால் சருமம் பாதிக்கப்படும். கூந்தல் அழகு பெற இயற்கையான முறையில் தயார் செய்த கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

Related posts

சில் கிளைமேட்டில் கூந்தல் பராமரிப்பு

nathan

பெண்களே எலி வால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா?

nathan

தலைமுடி நன்கு வளர வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? |

nathan

கூந்தல் வெடிப்பை தடுக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

தெரிஞ்சிக்கங்க… இளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா?

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயத்தை பயன்படுத்துவது எப்படி?

nathan

குளிர்கால கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகள்

nathan

கூந்தலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்க மருதாணி மட்டும் போதும்!….

nathan

ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க சில சிம்பிளான வழிகள்!!!

nathan