32.9 C
Chennai
Friday, Aug 15, 2025
14a9c5ab 1dca 4f7e 90a4 a48cb761ce4c S secvpf
சிற்றுண்டி வகைகள்

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

தேவையானப் பொருள்கள்:

அவல் – ஒரு கப்
பச்சைப் பயறு – 1/4 கப்
வெல்லம் – ஒரு கப்
குங்குமப்பூ – சிறிது
பால் – 1/2 கப்
ஏலக்காய் – அரை சிட்டிகை
நெய் – 1/4 கப்
முந்திரி – 10
திராட்சை – 10

செய்முறை:
14a9c5ab 1dca 4f7e 90a4 a48cb761ce4c S secvpf
* பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

* அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

* பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும்.

* பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும். அவல் சீக்கிரமே வெந்துவிடும். * சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவும்.

* இதற்கிடையில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

* ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

* ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.

* சுவையான அவல் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

Related posts

பிரெட் பனீர் பணியாரம்

nathan

சிக்கன் கட்லட்

nathan

பச்சை பட்டாணி கச்சோரி

nathan

சோயா தட்டை

nathan

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பேன்கேக்

nathan

சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி

nathan

சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல்

nathan

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வடைகறி ரெசிபி

nathan

ஹமூஸ்

nathan