சிற்றுண்டி வகைகள்

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கப்,
நூடுல்ஸ் – ஒரு கப்,
குடை மிளகாய் – 1,
கேரட் – 1
வெங்காயம் – 1
பால் – 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 ஊற வைக்கவும்.

* நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் கேரட், குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறிய பின்னர் நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக உருட்டி தோசை கல்லில் போட்டு இருபுறமும் வெந்ததும் நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Related posts

சுவை மிகுந்த மாலை நேர சிற்றுண்டி – கார்ன்ஃப்ளேக்ஸ் வெங்காய பஜ்ஜி (வீடியோ இணைப்புடன்)

nathan

சத்தான கேரட் – கேழ்வரகு ஊத்தப்பம்

nathan

குழந்தைகளுக்கான கேரமல் பிரை பனானா

nathan

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் & ஓட்ஸ் உப்புமா

nathan

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராஜ் கச்சோரி

nathan

தினை மிளகு பொங்கல்

nathan

சத்தான அத்திப்பழம் நட்ஸ் உருண்டை

nathan

சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி

nathan