30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
cuerdgirl
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆரோக்கிய வாழ்வில் தயிரின் பங்களிப்பு…!

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும்.

செரிமானம் அடைய
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

பாலில் லிகிசிஜிளி இருக்கிறது. தயிரில் இருப்பது லிகிசிஜிளிஙிகிசிமிலி. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

பெண்களுக்கு தலைமுடி மிருதுவாக
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது.

சமையல் பயன்பாடு
வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
cuerdgirl

Related posts

குழந்தைகளுக்கு மனநல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

சுவையான கத்திரிக்காய் தக்காளி கொஸ்து

nathan

90% கேன் வாட்டர் அபாயமானது!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் உஷ்ணத்தை தணித்து, குடல் புண்களை ஆற்றும் நெய்

nathan

உடல் எடை கூட… உணவோடு வெண்ணெய்!

nathan

பயன்தரும் சில எளிய குறிப்புகள்

nathan

இத தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க… தூக்கம் வராம அவஸ்தைப்படுறீங்களா?

nathan

இந்த 5 ராசிக்காரங்கள பணம் தேடி ஓடி வருமாம்…

nathan

இரவு நேர தூக்கத்தை விட பகல் நேரத்தில் தூக்கம் வருகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan