28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
chickenjopcy
அசைவ வகைகள்

சிக்கன் காளிப்ளவர்

தேவையான பொருட்கள் :

சிக்கன் – கால்கிலோ
காளிப்ளவர் -சிறியது
வெங்காயம் – 1
தக்காளி -1
பச்சை மிள்காய் – 1
மல்லி இலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1டீஸ்பூன்
சீரகத்தூள் – அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் – கால்டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால்டீஸ்பூன்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

செய்முறை :

சிறிய சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.

வடிகட்டிய சிக்கனுடன்,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,மஞ்சள் தூள்,தயிர்,உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.சிறிய துண்டுகளாக காளிப்ளவரை பிரித்து வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்ககவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும்,நறுக்கிய வெங்காயம் வதக்கவும், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.
மிளகாய்த்தூள்,சீரகத்தூள் சேர்க்கவும்.பிரட்டி விட்டு ஊறிய சிக்கனை சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.மூடி வைக்கவும்.சிக்கனில் ஊறும் நீரிலேயே வெந்து விடும்.
பின்பு காளிப்ளவரை சேர்க்கவும்.அகப்பை போட்டு கிளர வேண்டாம்.பூ உடையாமல் வேகட்டும்.

உப்பு சரி பார்க்கவும்.காளிப்ளவர் வெந்தவுடன்,மிளகுத்தூள் தூவி,நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான சிக்கன் காளிப்ளவர் ரெடி.
இதனை சாதம் சப்பாத்தி,பரோட்டா,நாணுடன் பரிமாறலாம்.
chickenjopcy

Related posts

நண்டு ஃப்ரை

nathan

சிக்கன் குழம்பு: பேச்சுலர் ஸ்பெஷல்

nathan

கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு

nathan

சுவையான சிக்கன் குருமா!…

sangika

வஞ்சரம் மீன் குழம்பு

nathan

ஓவனில் வறுக்கப்பட்ட சிக்கன்

nathan

தேங்காய்ப்பால் இறால் குழம்பு

nathan

இறால் பஜ்ஜி

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan