31.7 C
Chennai
Wednesday, Aug 20, 2025
milkallergy 15
மருத்துவ குறிப்பு

குழந்தைக்கு பால் அழற்சியை உண்டாக்குகிறது என்பதை கண்டறிவது எப்படி?

 

சில குழந்தைகளுக்கு பாலில் இருக்கும் லாக்டோ தன்மையால் அழற்சி ஏற்படும். இந்த அழற்சியை வெளிக்காட்டும் வகையில் குழந்தைகளின் உடலும் சில அறிகுறிகளை காட்டும். ஆனால் தாய்மார்கள் இதை கவனிக்காமல் மேலும் மேலும் பால் பொருட்களை சேர்ப்பதுண்டு. இதனால் அழற்சி மிகவும் மோசமாக வாய்ப்புள்ளது. எனவே உங்க குழந்தைக்கு பால் ஒவ்வாமை எப்படி ஏற்பட்டது என்று கவனிப்பது நல்லது.

 

பெரும்பாலான குழந்தைகளுக்கு மாட்டுப் பால் ஒத்து வருவதில்லை என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள். அதிலுள்ள புரதங்களால் குழந்தைகளுக்கு அழற்சி ஏற்படுகிறது. எனவே ஒரு பெற்றோராக குழந்தைகளுக்கு ஏற்படும் பால் ஒவ்வாமையை எப்படி கண்டறியலாம், வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பால் அழற்சி ஏற்பட காரணம் என்ன?

பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படும் சிலவகை புரதங்களால் பால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் மறுபடியும் மறுபடியும் பால் கொடுக்கும் போது தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த புரதத்தை நடுநிலையாக்க உருவாக்கப்படும் இம்யூனோகுளோபூலின் ஈ எனப்படும் ஆன்டிபாடிகளை உருவாக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் பாலை குடித்த பிறகு வெளிப்படும் புரதத்தை கண்டு நமது நோயெதிப்பு மண்டலம் ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றன. இந்த வேதிப்பொருள் நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்

குழந்தைகளின் செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பதால் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இந்த ஒவ்வாமை அதிகம் உண்டாகிறது. பாலில் உள்ள லாக்டோஸ் சிறுகுடலை அடையும் போது,​​லாக்டேஸ் நொதி அங்கிருந்து குளுக்கோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைகிறது. இதனால் பால் எளிதில் சீரணமாகுவதில்லை. இந்த லாக்டோஸ் இயற்கையாகவே பாலில் காணப்படும் சர்க்கரை. இப்பொழுது பால் சரிவர சீரணிக்காமல் போவதால் இந்த லாக்டோஸ் சேர்ப்பு உடம்பில் ஒவ்வாமையை உண்டு பண்ணுகிறது.

பால் அழற்சிக்கான அறிகுறிகள்

குழந்தைகளுக்கு இருக்கும் பால் அழற்சியை உடனே கண்டறிய இயலாது. அறிகுறிகள் மெது மெதுவாகத்தான் தெரிய ஆரம்பிக்கும். பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பல மணி நேரம் அல்லது பல நாட்களுக்கு பிறகு தான் அறிகுறிகள் தெரியும். குறிப்பாக பால் ஒவ்வாமை அறிகுறிகள் குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு அதிகமாக தென்படுகிறது.

* சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வெளியேறும், சளி மற்றும் இரத்தத்துடன் மலம் வெளியேறும்.

* வயிற்று வலி உண்டாகும்

* சிலருக்கு தோலில் ரேஸஸ் (சரும வடுக்கள்) ஏற்படும்.

* வயிற்று போக்கு மற்றும் இருமல் உண்டாகும்

* கண்களில் கண்ணீர் வடிதல், மூக்கு ஒழுகுதல் இவைகளும் பால் அழற்சியின் அறிகுறிகள்.

* சில அறிகுறிகள் கண் கூடாக தென்படும். குமட்டல், வாந்தி, பதட்டம், உதடுகளுக்கு அருகில் அரிப்பு மற்றும் உதடுகள் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

அனாபிலாக்டிக் (Anaphylactic)

சில குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமை காரணமாக அனாபிலாக்டிக் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இது குழந்தையின் உதடுகள், தொண்டை மற்றும் வாயில் வீக்கத்தை ஏற்படுத்தும். அனாபிலாக்டிக்கால் இரத்த இழப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். உடனே இதற்கு சிகிச்சை அளிக்கா விட்டால் பெரும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே உங்க குழந்தைகளுக்கு பால் அழற்சி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

தடுக்கும் முறைகள்

* உங்க குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் பொருட்களால் அழற்சி ஏற்பட்டால் உடனே பால் உணவுகள் கொடுப்பதை நிறுத்துங்கள். மேலும் பால் சேர்க்கப்பட்ட எந்த பொருட்களையும் கொடுக்காதீர்கள்.

* முதலில் இந்த அழற்சி குறித்து உங்க குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.

* லாக்டோஸ் இல்லாத பாலை கொடுங்கள். மாட்டுப் பால் இல்லாமல் சோயா பாலைக் கூட உங்க குழந்தைக்கு கொடுக்க முயலலாம்.

Related posts

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு

nathan

இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், உடனடியாக உங்கள் சிறுநீரகத்தை பரிசோதிக்கவும்.

nathan

உங்கள் கவனத்துக்கு மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு பதிவு..

nathan

கற்பையும், உயிரையும் பலி வாங்கும் நட்பு

nathan

சூடு தனிய சித்த மருந்துகள்

nathan

தம்பதியர் இடையே அடிக்கடி சண்டைகள் வரக்காரணம்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! குறைப்பிரசவம் நடக்க காரணமென்ன?

nathan

உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை

nathan