28.1 C
Chennai
Tuesday, Jan 21, 2025
coconut water1
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த பிரச்சனையில் இருந்தா இளநீர் அருந்தாதீர்கள்… இல்லையெனில் உங்கள் உயிருக்கு ஆபத்து… உஷார்…

இளநீர் என்பது தாகம் தீர்க்க இயற்கை நமக்கு வழங்கிய அற்புதமான பானம். இந்த இளநீர் தாகம் தணிப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் தருகிறது. குறிப்பாக கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், அதிக உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கிறது.

அத்தகைய ஆரோக்கியமான இளநீரில் சில குறைபாடுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக பலருக்கு தெரியாது. இளநீரை அதிகமாக குடிப்பது உங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அதேபோல,  அதிக அளவில் தவறான நேரத்தில் குடிப்பது உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்கு விளைவிக்கும். எனவே இளநீர் குடிப்பதால் ஏற்படும் சில தீமைகளை  படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயிற்றுப்போக்கு

ஒருவர் இளநீரை அதிகமாக குடிப்பதால், உடலில் நீரின் அளவு அதிகரிக்கும். அதனால் வயிற்று பிரச்சனைகளை சந்திக்கலாம். அதுவும் ஏற்கனவே வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் இளநீரைக் குடித்தால், அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

சளி பிடிக்கும்

இளநீர் குளிர்ச்சிப் பண்புகளைக் கொண்டதால், சிலருக்கு விரைவில் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே ஏற்கனவே சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை அதிகம் குடிக்கக்கூடாது. இளநீரில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. எனவே ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு மாத்திரைகளை எடுத்து வந்தால், மருத்துவரிடம் கேட்ட பின்னரே இளநீரைக் குடிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்தவர்கள்

ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்தவர்கள், இளநீரைக் குடிப்பதாக இருந்தால் மருத்துவரிடம் கேட்ட பின்னரே குடிக்க வேண்டும். ஏனெனில் அறுவை சிகிச்சை செய்த உடனேயே இளநீர் குடித்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகி, உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடிக்க விரும்பினால், முதலில் மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் மருத்துவர் இளநீரைக் குடிக்கலாம் என்று சொன்னால் மட்டுமே குடிக்க வேண்டுமே தவிர, வேண்டாம் என்று சொல்லியும் குடித்தால், சிறுநீரக பிரச்சனை தீவிரமாகிவிடும்.

வயிற்று உப்புசம்

வயிற்று உப்புசம் உள்ளவர்கள் இளநீரைக் குடிக்கக்கூடாது. மேலும் பலர் உடற்பயிற்சி செய்த பின்னர் இளநீரைக் குடிப்பார்கள். ஆனால் இளநீரில் சோடியம் குறைவாக இருப்பதால், ஓரளவு தான் அது தாகத்தைத் தணிக்கும். ஆனால் இளநீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் சாதாரண தண்ணீரைக் குடிப்பது சிறந்தது. ஏனெனில் சாதாரண நீரில் இளநீரை விட அதிக சோடியம் உள்ளது.

இளநீரைக் குடிக்க சிறந்த நேரம் எது?

இளநீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலம் குடிக்கலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இளநீரைக் குடிப்பது பல நன்மைகளை வழங்கும். அதில் உடல் சோம்பல் நீங்கி, உடலுக்கு ஏராளமான ஆற்றல் கிடைக்கும். இது தவிர உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்னரும் கூட குடிக்கலாம். இதனால் பல நன்மைகளைப் பெற முடியும். மேலும் இளநீரை உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குடித்தால், உடல் நீரேற்றத்துடன் மற்றும் ஆற்றலுடன் இருக்கும். அதோடு இதில் கலோரிகள் குறைவு மற்றும் எளிதில் ஜீரணமாகும். ஆகவே இதை உடற்பயிற்சிக்கு பின்னரும் குடிக்கலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு இளநீர் குடிக்கலாம்?

உடலின் தினசரி பொட்டாசிய தேவையின் அளவு 2,600 மிகி முதல் 3,400 மிகி வரை ஆகும். ஒரு இளநீரில் சுமார் 600 மிகி பொட்டாசியம் உள்ளது. ஆகவே இளநீரை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது ஹைபர்கேமியாவை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒரு 2-3 இளநீர் மட்டுமே குடிக்கலாம். எனவே அளவாக இளநீரைக் குடித்து வளமோடு வாழுங்கள்.

Related posts

முதுகு நலமாயிருக்க 10 வழிகள்”…

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கையான டூத் பேஸ்ட் வீட்டிலேயே செய்யலாம்!

nathan

அப்படி என்ன ஸ்பெஷல்? பெண்களே இது மட்டும் தெரிந்தால் நீங்கள் தினமும் பூ சூடுவீர்கள்..!

nathan

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ள 5 வழிகள்:

nathan

நேரத்தை மிச்சப்படுத்த வண்டியில் செல்லும் போதே சாப்பிடும் நபரா நீங்கள்?அப்ப இத படிங்க!

nathan

படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த பொருட்களை சாப்பிட்டு பாருங்க…

nathan

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?

nathan

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கியமான விஷயங்கள்! தெரிந்துகொள்வோமா?

nathan