hair
தலைமுடி சிகிச்சை

நரை முடி கருப்பாக எளிய டிப்ஸ் -தெரிந்துகொள்ளுங்கள் !

மெலனின் என்பது நம் தலைமுடியை கருப்பாக வைத்திருக்க உதவும் நிறமி. இந்த மெலனின் குறைபாடு இளம் வயதிலேயே பலருக்கு நரை முடியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

மரபணுக்கள் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சில குறைபாடுகளாலும் வெள்ளை முடி ஏற்படலாம். நரை முடி கருப்பாகவும் நரையாகவும் மாறாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்த சித்த மருத்துவத்தின் சில குறிப்புகளை இந்த பதிவில் காணலாம்.

குறிப்பு 1 :

மருதாணி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து இரண்டு கிராம், நெல்லிக்காய் கால் கிலோ ஆகிய மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து, அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வெயிலில் ஒரு மாத காலம் காய வைக்க வேண்டும். அந்த ஒரு மாத காலத்தில் இது தைலமாக மாறிவிடும். பிறகு தினமும் இதை தலையில் தேய்த்து வர நரை முடி நீங்கி கருப்பாக முடி வளரும்.

குறிப்பு 2 :

உருளை கிழங்கு தோல், மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். ஆகையால் உருளை கிழங்கு தோலை கொண்டு நரை முடியை கறுப்பாக்கலாம். இரண்டு கப் நீரில் ஐந்து உருளை கிழங்கு தோலை போட்டு வேக வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த நீரை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொண்டு, தலையில் அந்த நீரை தடவி ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் கொண்டு தலையை அலச வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்வதன் மூலம் நரை முடி கருப்பாக மாறும்.

குறிப்பு 3 :

இஞ்சியை பால் சேர்த்து அரைத்து, அதை நரை முடி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விட்டு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்து வர நரை முடி நீங்கும். இதனை வாரம் இரு முறை செய்யலாம்.

குறிப்பு 4 :

கசகசா, அதிமதுரம் ஆகிய இரண்டையும் பால் சேர்த்து நன்கு அரைத்து, குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு இதை தலையில் தடவி ஊறவைத்து பின் குளித்து வர நரை முடி கருப்பாக மாறும்.

குறிப்பு 5 :

மிளகை தூளாக்கி அதை தயிரில் கலந்து தலைக்கு தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் சிகைக்காய் போட்டு குளித்தால் நரை முடி கருப்பாக மாறும்.

மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நரை முடியை கறுப்பாக்கலாம்.

அதோடு தேவை இல்லாத இரசாயன ஷம்பூக்களை தலைக்கு தேய்ப்பது, இரசாயன எண்ணெய்கள், கிரீம்களை தலைக்கு தேய்ப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Related posts

உங்க கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் மரச்சீப்பு

nathan

முடி கொட்டுவது இயல்பானதா?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்ட சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

​சால்ட் அண்ட் பெப்பர்… ஹேர் ஸ்டைல் அல்ல.. குறைபாடு!

nathan

உங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

nathan

முடி உதிரலை தடுத்து அடர்த்தியாக புதிய முடிகளை வளர செய்ய ஒரே தீர்வு எலுமிச்சை!முயன்று பாருங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பொடுகுத் தொல்லைக்கான அறிகுறிகளும்… காரணங்களும்…

nathan

தலை முடியின் பராமரிப்புகள்

nathan