தேவையான விஷயங்கள்
பூண்டு – 100 கிராம்,
பால் – 100 மில்லி,
கருப்பட்டி – 150 கிராம்,
கடலை எண்ணெய் – 100 மி.லி.
செய்முறை
கருப்பட்டியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி அடுப்பில் வைக்கவும்.
பூண்டை பாலில் நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து பேஸ்ட் செய்யவும்.
கடாயில் கடலை எண்ணெயை ஊற்றி, சூடானதும் நறுக்கிய பூண்டு விழுதைச் சேர்த்து, விடாமல் நன்கு கிளறவும்.
நன்கு கொதித்ததும் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.
அனைத்தும் நன்றாக சேர்த்து களி திரண்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.